பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினாரா பிரியங்கா!? பைனலுக்கு 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் என்னானது பிரியங்காவிற்கு.!?
பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக இருந்த பிரியங்கா அண்மையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
ரசிகர்களுடன் இறுதி வரை வந்த பிரியங்கா தற்போது பிக் பாஸ் வீட்டில் 100 நாட்களை கடந்துவிட்டார். டைட்டில் வெற்றியாளர் ராஜு தான் என கூறப் படுகின்ற போதும் பிரியங்காவிற்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் நேற்றைய தினம் பிரியங்கா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகின்றது. திடீரென ஏற்ப்பட்ட உடல் நலக் குறைவு காரணமாகவே பிரியங்கா வெளியேறினார் என கூறப்பட்ட போதும் மருத்துவ சிகிச்சையின் பின் பிரியங்கா பிக் பாஸ் வீட்டிற்கு மறுபடி வந்துள்ளதாக கூறப்படுகின்றது. இன்றைய எபிசோட்டில் தான் இறுதி முடிவு தெரியும் பார்க்கலாம்.?