பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளிவேறப் போவது யார்.? இதோ முழு விபரம்.!
பிக் பாஸ் சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்ற கேள்வி அனைவரிடமும் உள்ளது. இது வரை அளிக்கப் பட்டுள்ள வாக்குகளில் அடிப்படையில் முதல் இடத்தில் அக்ஷராவும், இரண்டாம் இடத்தில் சிபியும், மூன்றாம் இடத்தில் நிரூப்பும், நான்காம் இடத்தில் மதுவும் உள்ளனர்.
அதன் பின்னரே மற்றைய போட்டியாளர்கள் உள்ளனர். ஆகக் குறைந்த வாக்குகள் பெற்ற போட்டியாளராக ஸ்ருதி மற்றும் அபினய் உள்ளனர். இதன் அடிப்படையில் இந்த வாரம் வெளியேறுவது அபினய் அல்லது ஸ்ருதி தான். ஆனால் இது தீபாவளி வாரம் என்பதால் யாரும் வெளியேற்றப் படாமலும் இருக்கலாம்.
ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களை வெளிவேற்றினால் தான் குறிப்பிட்ட தேதியில் நிகழ்ச்சியை முடிக்க முடியும் என்பதால் இம்முறை வெளியேற்றப் படலாம் என்ற சந்தேகமும் உள்ளது. ஆரம்பத்தில் இருந்த இடம் தெரியாமல் இருந்த போட்டியாளர்கள் தற்போது பேச ஆரம்பித்து விட்டார்கள்.
குறிப்பாக நிரூப் மற்றும் மது தற்போது அதிகம் பேச ஆரம்பித்துள்ளதுடன் நிகழ்ச்சியை புரிந்து விளையாட ஆரம்பித்துள்ளனர். பார்க்கலாம் ஸ்ருதியா அபினய் ஆஹ் வெளியே செல்கின்றார்கள் என்று.!