" "" "

“இரவு என் தந்தை அருகில் உறங்கிக்கொண்டிருந்தேன், காலையில் தந்தையை சடலம் என்றார்கள்” தயவு செய்து இதனை யாரும் செய்யாதீர்கள்! தந்தையின் மரணம் பற்றி கண்ணீருடன் கூறிய நீலிமா ராணி.!

அருகில் உறங்கிக் கொண்டிருந்த தந்தை காலையில் சடலாமாக மீட்கப் பட்ட கொடுமை என் வாழ்வில் நிகழ்ந்தது. இது போன்ற கொடுமையான நிலை எந்த ஒரு மகளுக்கும் எந்த குடும்பத்திற்கும் வரகூடாது என்பதே என் பிரார்த்தனை என நடிகை நீலிமா ராணி அண்மையில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நீலிமா ராணி பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

பின்னர் கதாநாயகிகளில் தோழியாக, கதாநாயகனின் தங்கையாக நடித்தார். ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பின் சீரியல்களில் நடித்த இவர் தன்னை விட 20 அதிகமான இசைவானன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திரைப்படங்கள், சிரீயல்கள் என பிசியாக இருக்கும் நீலிமா அண்மையில் பிரபல மீடியா ஒன்றுக்கு பேட்டியளித்த போது என் தந்தையின் மரணம் மிக கொடூரமாக நடந்தது.

என் தந்தை மீது அதிக பாசம் வைத்திருந்தேன், அவரும் அப்படி தான். என்றும் என்னை தனது அருகில் படுக்க வைத்துக் கொள்வார். தந்தையின் அருகில் ஒரு நாள் உறங்கிக் கொண்டிருந்தேன், நான் எழுந்திருக்கும் போது தந்தை எழுந்திருக்கவில்லை. குடும்பத்தினர் தந்தையை எழுந்திருக்க கூறி அழுதனர். நானும் அழுதேன், அப்பா எழுந்திருக்கவே இல்லை, அப்பா இறந்துவிட்டதாக கூறினார்கள்.

அப்பாவின் மரணத்திற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது புகைத்தல் தான்.அப்பா அதிகமாக புகைப்பார். டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்தனர், புகைத்தல் பழக்கத்தால் நுரையீரல் பாதிக்கப் பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டது, புகைத்தலை நிறுத்த கூறிய போது நிறுத்தவில்லை. இதனால் ஏற்பட்ட மரணமே எனது தந்தைக்கு ஏற்பட்டது. தயவு செய்து புகைப்பதை நிறுத்துங்கள் என கூறியுள்ளார்.!!