சக்தி எப் எம் தயாரிப்பில் மிரட்டும் “பார்த்தீபா”வீடியோ இணைப்பு..!

சக்தி வானொலியின் தயாரிப்பில் அபர்ணா சுதன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பார்த்தீபா. கஜன், ரசிபிரபா சந்தீபனி, சேரோலின் ஆகியோரின் நடிப்பில் வெளியான பார்த்தீபா இலங்கை தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சி என்றே கூற தோன்றுகிறது.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

வானொலி நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகமாகும் இளம் பெண்ணின் குரலில் மயக்கும் அறிவிப்பாளராக இருக்கும் இளைஞன், குறித்த யுவதிக்காக எந்தளவு தூரம் செல்கிறான் என்பது கதையாக இருக்கிறது. ஆரம்பத்தில் யாராக இருக்கும் குறித்த பெண் என குழம்பி இறுதியில் பேயாக இருக்கலாம் என்று தோன்றும் போது வித்தியாசமான முறையில் டுவிஸ்ட் வைக்கிறார் அபர்ணா சுதன்.

37 நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்படத்தில் இப்படி ஒரு திருப்பத்தை நிச்சயம் யாரும் எதிர் பார்த்திருக்க மாட்டோம். கதையே இல்லாத குறும்படங்கள் , முழு நீள திரைப்படங்களுக்கு நடுவில் “பார்த்தீபா” தனித்து தெரிகிறாள். பாடல்கள், இசை என அனைத்தும் ரசிகர்களை கவர்கிறது,

ஆரம்பம் குழப்பமாகவும், முடிவு சிறப்பாகவும் இருக்கிறது, கதைக்கு நடிக,நடிகைகள், இசை, பாடல் என அனைத்தும் உயிர் கொடுத்துள்ளதால் “பார்த்தீபா” ரசிகர்கள் மனதில் நிலையான இடம் பிடிக்கும் என்று நம்பலாம்.! சக்தி எப் எம் உட்பட திரைப்பட குழுவினருக்கு புரட்சி வானொலியின் வாழ்த்துக்கள்..!!