சூரியனை நெருங்கும் நாசா விண்கலம்.. அதீத வெப்பத்தையும் தாங்கும் வடிவமைப்பு…!
சூரியன் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படுகின்ற போதிலும் அதீத வெப்பம் தரும் சூரியனை நெருங்கிச் சென்று ஆய்வுகள் செய்வதில் சிக்கல் காணப்பட்டது. இந்நிலையில் நாசா அனுப்பியுள்ள பார்க்கர் சோலர் விண்கலம் சூரியனை நெருங்கிச் சென்று சாதனை படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் விண்ணுக்கு செலுத்தப்பட்ட இவ் விண்கலம் தற்போது சூரியனை நோக்கிய பயணத்தில் பல மில்லியன் மைல்கள் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
612 கிலோ நிறையுடன், 9 அடிகள் 10 அங்குலம் நீளத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இவ் விண்கலம் 1400 டிகிரி வெப்பத்தையும் சாதாரணமாக தாங்கும் வகையில் காபனால் உருவாக்கப்பட்டுள்ளது. வெப்பச் சலனம், வெப்பக் கடத்தல், வெப்பக் கதிர் வீச்சு போன்ற சவால்களை இதன் மூலம் இவ் விண்கலம் சமாளிக்கும் திறன் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
1976 ஆம் வருடத்தில் அமெரிக்க – ஜேர்மன் கூட்டில் உருவாக்கப்பட்டு சூரியனை நோக்கி அனுப்பப்பட்ட ஹீலியோஸ் – 2 விண்கலமானது 42.73 மில்லியன் கிலோமீட்டர்கள் வரை பயணித்துள்ளது. ஆனால் பார்க்கர் அத் தூரத்தையும் கடந்து பயணிப்பதாகக் கூறப்படுகின்றது.
ஆயினும் 2024 இல் இவ் விண்கலம் சூரியனின் மேற்பரப்பில் 3.8 மில்லியன் மைல் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு தொடர்ச்சியாக சூரியனின் மேற்பரப்பைக் கண்காணித்து பூமிக்குத் தகவல் வழங்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”