" "" "

முந்தானை முடிச்சு திரைப்படத்தில் ஊர்வசியின் கையில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா.? இவர் ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரபல நடிகை என்றால் நம்புவீர்களா.? இதை பாருங்களேன்.!!

குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நிலையான இடம் பிடித்தவர்கள் என்றால் ஒரு சிலர் மாத்திரம் தான். குழந்தை நட்சத்திரமாக பிரபலமாக இருந்த பேபி ஷாலினி, பேபி ஷாமினி போல் சினிமாவை விட்டு விலகி இருப்பவர்கள் ஏராளமானவர்கள்.

ஒரு சிலர் மட்டுமே இன்றளவும் சினிமாவில் சாதித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதில் ஒருவர் தான் முந்தானை முடிச்சு திரைப்படத்தில் நடிகர் பாக்கியராஜின் மகனாக நடித்த நடிகை சுஜிதா. இவர் பூவிழி வாசலிலே உட்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ஆனால் வளர்ந்த பின் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை, இதனை தொடர்ந்து திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த சுஜிதா பின்னர் சீரியல்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சியில் அதிகமான சீரியலில் சுஜிதா இருக்கிறார்.

தமிழ் மட்டும் இன்றி மலையாள சீரியல்களிலும் சுஜிதா அசத்தி வரும் அதே நேரம் தற்போது பிரபல தொலைகாட்சியில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முன்னணி நாயகியாக இருக்கிறார்!