" "" "

இன்றைய ராசி பலன்! 16.06.2020

இன்றைய பஞ்சாங்கம். 16-06-2020, ஆனி 02, செவ்வாய்க்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை ஏகாதசி திதி. நாள் முழுவதும் அஸ்வினி நட்சத்திரம். நாள் முழுவதும் சித்த யோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேஷ ராசி நேயர்களே: வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்கவும். ண்பர்களின் உதவியால் பண பிரச்சினைகள் ஓரளவு குறையும். உத்தியோகத்தில் தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ரிஷப ராசி அன்பர்களே: வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.உடல் நலத்தில் கவனம் தேவை. வாகன பழுது ஏற்படும்.சுப காரியங்கள் கைகூடும்.எதிர்பாராதபடி பணிச்சுமை அதிகரிக்கக்கூடும்.வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம்.

மிதுன ராசி காரர்களே: அரசாங்க வகையில் இழுபறியாக இருந்த காரியம் அனுகூலமாக முடியும்.கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். சிலருக்குத் தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.வியாபாரத்தில் கடன் தருவதை தவிருங்கள்

கடக ராசி நேயர்களே: சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.நண்பர்கள் மூலம் உதவிகள் எளிதில் கிடைக்கும். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். திடீர் சந்திப்புகள் நிகழும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை யைக் கடைப்பிடிக்கவும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள்.மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

சிம்ம ராசி அன்பர்களே: பணவரவு ஏற்பட்டு கடன் பிரச்சினை ஒரளவு குறையும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் விலகும்.உறவினர்கள் மூலம் கிடைக்கும் தகவல் மகிழ்ச்சி தரும். இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள்.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

கன்னி ராசி காரர்களே: உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம்.. யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள்.திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் புது முடிவுகளை தவிர்ப்பது நல்லது.உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம்.

துலாராசி உறவுகளே: கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.பிள்ளை களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் நண்பர்கள் மூலம் எதிர்பாராத ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் உறவினர்களால் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.வியாபாரத்தில் பரபரப்பாகச் செயல்படுவீர்கள்.போராடி வெல்லும் நாள்

விருச்சிக ராசி நேயர்களே: கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும் . பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொண்டாலும் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. அரசால் அனுகூலம் உண்டு.உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

தனுசு ராசி அன்பர்களே: புதியவர்கள் அறிமுகமாவார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது.உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகளால் தேவையற்ற சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

மகர ராசி காரர்களே: எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். குடும்பத்தினருடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும்.யாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். பண பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

கும்ப ராசி உறவுகளே: குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை.

மீன ராசி நேயர்களே: உறவினர்கள் வகையில் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும்.பணப்புழக்கம் குறைவாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். விலகி சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள்.