பிரபல நடிகை வினோதினி மற்றும் நடிகர் ரஞ்சித் எடுத்த அதிரடி முடிவு..!!
நடிக நடிகைகள் சினிமாவிற்கு வந்து சில நாட்களிலேயே காணாமல் போய்விடுவார்கள் ஆனால் சிலர் மக்கள் மனதில் நிலைத்து நிற்பார்கள் அப்படி மக்கள் மனதில் நிலைத்து நின்றவர் தான் நடிகை வினோதினி. விசுவின் மணல் கயிறு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான வினோதினி குழந்தையாக சில திரைப்படங்களில் நடித்தார்.
பின் வண்ண வண்ண பூக்கள் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் 40 திற்கு மேட்பட்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். சில காலம் சினிமாவில் இல்லாமல் இருந்த வினோதினி அதன் பின் சீரியல்களில் நடித்தார்.
அகல் விளக்குகள், அக்னி நட்சத்திரம் உட்பட ஏராளமான சீரியல்களில் நடித்தார். இந்த நிலையில் வினோதினியை காணவில்லையே என பலர் கூறிக் கொண்டிருக்க திடீரென அரசியலில் இறங்கியுள்ளார். அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரனை சந்தித்து அந்த கட்சியில் இணைந்துள்ளார்.
இவருடன் ப்ரியா ராமனின் முன்னாள் கணவர் ரஞ்சித்தும் இருந்துள்ளார். ஏற்கனவே பல நடிக நடிகைகள் அரசியலில் கால் பதித்துள்ள நிலையில் வினோதினியும் அரசியலில் குதித்தது குறித்து விமர்சன மீம்ஸ்கள் தற்போது வைரலாகி வருகிறது.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.