அனைத்து பிக் பாஸ் போட்டியாளர்களில் 5ம் இடம் பெற்றுக் கொண்ட நடிகர் ஆரி.! தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் முதல் முதல் நடந்த ஆச்சர்யம்..!!
பிக் பா நிகழ்ச்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த போட்டியாளர்களில் ஆரியும் ஒருவர். தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி பல திரைப்படங்கள் நடித்த போதும் கொண்டாடக் கூடிய அளவு ஒரு திரைப்படம் கூட அமையவில்லை. இதனால் சினிமாவில் இருந்துகொண்டே சமூக சேவை , விவசாயம் என தனது இன்னொரு பாதையில் பயணித்தார்.
இதனால் விருதுகளும் பெற்றார். இதன் போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆரம்பத்தில் இவர் என்ன் இப்படி என ஆரியை வெறுத்த ரசிக்கரகள் பின்னர் ஏற்றுக்கொண்டனர். இவர் இப்படி தான், இதனால் நன்மை தான் என்பதை உணர்ந்து அவருக்கு ஆதரவு கொடுத்தார்கள்.
இந்த நிலையில் தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் யாரும் பிடிக்காத இடம் ஒன்றை ஆரி பிடித்துள்ளார். அதாவது இந்திய அளவில் இடம்பெற்ற பிடித்த போட்டியாளர் அல்லது சிறந்த பிக் பாஸ் போட்டியாளர் யார் என்று நடத்தப் பட்ட கருத்து கணிப்பில் ஹிந்தி, தெலுங்கு,
மலையாளம் உட்பட அனைத்து மொழி போட்டியாளர்களில் 5ம் இடத்தில் உள்ளார். இது வரை நடந்து முடிந்த 4 சீசன்களிலும் ஒரு போட்டியாளர் கூட இந்திய அளவில் டாப் 5ல் வராத நிலையில் அனைத்து மொழி போட்டியாளர்களுடன் ஆரி 5வது இடத்தில் இருக்கிறார்.!!