தமிழில் மீண்டும் நடிக்க வரும் “இயற்கை” திரைப்பட நாயகி குட்டி ராதிகா.! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா..!? இத பாருங்கள்..!!
13 வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த குட்டி ராதிகாவை ‘தமயந்தி’ படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் கொண்டு வந்துள்ளார் இயக்குனர் நவரசன். தமிழில் இயற்கை, வர்ணஜாலம், மீசை மாதவன் மற்றும் தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்ற ‘அருந்ததி’, ‘பாகமதி’ ஆகிய படங்கள் போன்ற ஹாரர் திரில்லர் படமாக இப் படமும் தயாராகி வருகின்றது. நடிகை அனுஷ்காவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்த போதிலும் அவரின் தொடர் படப்பிடிப்பு காரணமாக நடிக்க முடியாது போனதால் குட்டி ராதிகாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த படத்தில் குட்டி ராதிகா, பெண் அகோரி வேடத்தில் நடிக்கின்றார். இதற்காக பிரத்தியேகமாக 4 மணி நேரம் மேக்கப் போட்டு கடும் சிரத்தை எடுத்து நடித்து வருகின்றார். மேலும் ரமேஷ் அரவிந்த், ரங்கயாணா ரகு, ரவி பிரசாத், சுசித்ரா பிரசாத் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.