அனிருத் மற்றும் ரஜினிகாந்த் மீது பரபரப்பு புகார்..காரணம் இது தானாம். !!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரிலீஸுக்கு தாயாராகும் திரைப்படம் தர்பார். கடந்த வருடம் தைபொங்கலுக்கு பேட்ட திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது, அதே போல் இந்த வருடம் வரும் 9ம் திகதி தர்பார் ரிலீஸாக உள்ளது. ஏற்கனவே பாடல்கள் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆன நிலையில் பலரும் திரைப்படத்திற்காக காத்திருக்கின்றனர்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத் மீது பரபரப்பு புகார் ஒன்றை தமிழ் நாடு இசை கலைஞர்கள் சங்கத் தலைவர் தீனா கொடுத்துள்ளார். இந்த புகார் குறித்து மீடியாக்களுக்கு பேட்டியளித்த தீனா.. எமது கலைஞர்கள் அனைவராலும் ஓரம் கட்டப் படுகின்றனர். ஹாலிவுட் இசை கலைஞர்களுக்கு தான் அனைவரும் வாய்ப்பு கொடுக்கின்றனர்.

ஆனால் தர்பார் படத்தில் தமிழக இசை கலைஞர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுப்பேன் என அனிருத் வாக்குறுதி கொடுத்தார். இதற்கு ரஜினி அவர்களும் சம்மதம் கூறினார். ஆனால் கொடுத்த வாக்கை அனிருத் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் காப்பாற்றவில்லை, ஹாலிவுட் இசைகலைஞர்களை பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

இதனால் தான் புகார் கொடுத்தோம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த புகார் 9ம் திகதி ரிலீஸாக இருக்கும் தர்பார் திரைப்படத்திற்கு தலைவலியாக மாறும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்..!