" "" "

அறுவை சிகிச்சையின் பின் வெளியான தொகுப்பாளினி அர்ச்சனாவின் புகைப்படம்.! பிரார்த்தனை செய்யும் ரசிகர்கள்.!

தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி சினிமா, சீரியல் என அசத்திக் கொண்டிருப்பவர் தொகுப்பாளினி அர்ச்சனா. எந்த நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்கினாலும் தன்னுடைய முழு ஈடுபாட்டையும் காட்டுவதால் அனைவருக்கும் பிடித்துப் போய்விடும், இதனால் அனைவரும் அர்ச்சனாவை கொண்டாடினார்கள்.

90 கிட்ஸ் ஆரம்பித்து 2k வரை இவரது ரசிகர்கள் தான். பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு சில சர்ச்சையைகளை கடந்து வந்தார். ஆரம்பத்தில் இருந்த தொலைகாட்சியில் இருந்து விலகி பிரபல தொலைகாட்சியில் மிஸ்டர் & மிஸஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். திடீரென தலையில் ஏற்பட்ட நோயினால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைக்கு சென்றார்.

கடந்த 4 நான்கு நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை நடந்தது, தலையில் நடந்த அறுவை சிகிச்சை நல்லதாக முடிந்ததாக அர்ச்சனாவின் மகள் தெரிவித்துள்ளதுடன் தாயின் கை மீது தனது கையை வைத்து புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அர்ச்சனா சீக்கிரம் குணரமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.,,!!