திருமணமாகி 6 வருடங்களின் பின் கர்ப்பமாக இருக்கும் அட்லியின் மனைவி..! வைரலாகும் புகைப்படங்கள்..!!

இளம் வயதிலேயே முன்னணி இயக்குனர் என பெயர் எடுத்தவர் அட்லி. 2013ம் ஆண்டு ஆர்யா நயன்தாரா நடிப்பில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தை இயக்கிய அட்லீ முதல் திரைப்படத்திலேயே சிறந்த இயக்குனர், சிறந்த கதாசிரியர் என விருதுகளை அள்ளினார்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

அதன் பின் அவருக்கு பிடித்த நடிகரான விஜயுடன் கூட்டு சேர்ந்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று திரைப்படங்களை இயக்கினார். இந்த மூன்று திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. தற்போது சங்கி என்கிற திரைப்படத்தை இயக்க போகிறார். இதில் சாருக்கான் நடிக்கிறார்.

இவர் 2014ம் ஆண்டு சிங்கம் 2, நடுநிசி நாய்கள் போன்ற திரைப்படங்களில் நடித்த பிரியாவை திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 6 வருடங்கள் ஆன நிலையில் தற்போது பிரியா கர்ப்பமாகி உள்ளார்.

அண்மையில் பிரியாவின் சில புகைப்படங்கள் வெளியானது இதில் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி இருக்கின்றனர். இன்னுமொரு புகைப்படத்தில் பிரியாவிற்கு வயிறு கொஞ்சம் பெரிதாக உள்ளது. இந்த நிலையில் பிரியா வீட்டினர் மகள் கர்ப்பமாக உள்ளதை உறுதி செய்துள்ளனர்..!!