" "" "

பாலாஜிக்கு மொக்க கப் கொடுத்து விட்டார்கள், பாலா தான் வின்னர்” டைட்டிலை பாலாஜிக்கு கொடுக்கச் சொல்லி கதறி அழும் சிறுவர்கள்.! வீடியோ இதோ.!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் “கெட்டவன்னு பெயர் எடுத்த நல்லவன் டா” என கொண்டாடப் படுபவர் பாலாஜி முருகதாஸ். பிக் பாஸ் வீட்டில் யார் சொல்வதையும் கேட்காமல் தனக்கு என்ன பிடித்ததோ அதை செய்து ரசிகர்களின் கோபத்தை சம்பாதித்த பாலாஜிக்கு சர்பிரைஸ் மேல் சர்பிரைஸ் குவிந்து வருகிறது.

பாலாஜியை வயதானவர்கள் யாருக்கும் பிடிக்கவே இல்லை, மரியாதை தெரியாதவர், பேச தெரியாதவர், எல்லோரிடமும் கோபப் படுபவர் என பெருசுகள் திட்டி தீர்த்தனர். ஆனால் பாலாஜிக்கு இன்னொரு ரசிகர் கூட்டம் உருவாகி உள்ளது, 2 வயதில் இருந்து 10 வயதான குழந்தைகள் அனைவருக்குமே பாலாஜியை தான் பிடித்துள்ளது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

பல குழந்தைகள் பாலாஜியை பிடிக்கும் என கொண்டாடி உள்ளனர். இந்த வீடியோக்களை பாலாஜி தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர்களில் சிலர் பாலாஜி வெறியன்களாக இருக்கின்றனர். பாலாஜிக்கு கமலஹாசன் கப் கொடுக்கவில்லை என சிறுவன் ஒருவன் கதறி அழுத வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சிறுவன் ஒருவன் பாலாஜிக்கு மொக்க கப் கொடுத்து விட்டார்கள். பாலாவிற்கு டைட்டில் கொடுக்க சொல்லுங்கள் என கதறி அழுதுள்ளார். இதோ வைரலாகும் வீடியோ.!!

Video Copyrights & Credits Owned by :Newstamil.in

Video Copyrights & Credits Owned by :Cine Samugam