" "" "

பிக் பாஸ் வெற்றிக் கொண்டாடத்தில் சோம் சேகரின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டிய ரம்யா பாண்டியன்.!! புகைப்படங்களை பார்த்து ஜோடியை வாழ்த்தும் ரசிகர்கள்.!

பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில் தற்போது பிக் பாஸ் வெற்றிக் கொண்டாட்டமும் ஷூட் செய்து முடிக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு சீசனிலும் வெற்றிக் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப் படுவது வழமை, அதே போல் இந்த சீசனிலும் ஏற்பாடு செய்யப் பட்டதுடன் சிறப்பாக நடந்து முடிந்தது, அனைத்து போட்டியாளர்களும் இதில் கலந்துகொண்ட நிலையில் ஆடல் பாடல் என அசத்தினார்கள்.

ஆனால் எந்த சீசனிலும் நடக்காத ஒரு விடயம் இந்த சீசனில் நடந்தது, பொதுவாக பிக் பாஸில் காதல் ஆரம்பித்து பிக் பாஸ் முடிந்ததும் முடிந்துவிடும், ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் காதல் காதல் என்று கத்தாமல் அமைதியாக இருந்துவிட்டு வெளியே வந்து காதலிக்க ஆரம்பித்துள்ளது ஒரு ஜோடி.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ரம்யா சோம் காதலை வீட்டிற்குள் எவ்வளவோ காட்ட முயற்சித்த போதும் இருவரும் விலகி இருந்தனர், வெளியே வந்த பின் ரம்யாவின் குடும்பம் ஓகே சொல்ல சோம் சேகர் வெளிப்படையாக தனது இன்ஸ்ட்டாகிராம் ஸ்டோரியில் ரம்யாவுடனான காதலை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் கொண்டாட்டத்தில் மீண்டும் ஜோடி இணைந்துள்ளது.

சோம் சேகர் மற்றும் ரம்யா இருவரும் அதிகம் பேசிக்கொண்டதுடன் அருகருகே இருந்துகொண்டனர். அத்துடன் இருவரும் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். ஆரம்பத்தில் இருந்து சோம் . ரம்யாவை காதலித்து வந்த நிலையில் தற்போது சோமின் காதலுக்கு ரம்யாவும் பச்சைகொடி காட்டியுள்ளார். இனி வரும் நாட்களில் இருவரும்.ஒன்றாக ஊர் சுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது பார்க்கலாம்.!!