" "" "

பிக் பாஸ் வீட்டில் பணப் பெட்டிக்காக ரியோ கேப்ரியலாவுடன் சண்டை போட்டது ஏன்.? வெளியானது உண்மைக் காரணம்…ரியோ இப்படியா என திட்டும் ரசிகர்கள்.!!

பிக் பாஸ் வீட்டில் தற்போது பாலாஜி, சோம் சேகர், ஆரி, ரியோ ராஜ், ரம்யா பாண்டியன் ஆகியோர் இருக்கின்றனர். வெற்றி பெறும் வாய்ப்பு ஆரிக்கே அதிகம் இருப்பதால் மற்றைய போட்டியாளர்கள் சற்று கவலையாகவே உள்ளனர். நேற்று 5 லட்சம் ரூபாய் பணம் போட்டியாளர்களுக்காக வைக்கப் பட்டது. யாரும் பெட்டியை எடுக்காமல் இருந்தால் அது 10 லட்சம் வரை அதிகரிக்கும் வாய்ப்பு இருந்தது.

ஆரி எடுக்க மாட்டேன் என கூறி விட்டார். அதே போல் பாலாஜியும் என்னை நம்பி ஓட்டுபோட்ட ரசிகர்கள் வெளியே இருக்கின்றனர், பண ஆசையில் நான் அதனை எடுத்தால் வாக்களித்த ரசிகர்களை ஏமாற்றுவது போல் ஆகிவிடும். தோல்வி தான் நிரந்தரம் என தெரிந்தால் கூட இறுதி வரை போராடுவேன் என் ரசிகர்களுக்காக என கூறினார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ரம்யாவும் பணத்தை எடுத்து செல்ல மாட்டேன் என கூற போட்டியில் கேபி, சோம், ரியோ ஆகியோர் மிஞ்சினார்கள். 5 லட்சம் என்றானதும் திடீரென கேபி 5 லட்சத்தை எடுத்துக் கொண்டார். அனைத்து போட்டியாளர்களும் சற்று யோசித்து பார் என கூறிய போதும் தனது முடிவில் கேபி உறுதியாக இருந்தார்.

இந்த நிலையில் ரியோ கேபியிடம் நான் தான் எடுத்துச் செல்ல இருந்தேன் நீ ஏன் எடுத்தாய் என சண்டையிட்டார் இது கேபியை வெளியே அனுப்ப கூடாது என ரியோ போட்டதாக சண்டை நினைத்துக் கொண்டிருக்க ரியோ 5 லட்சம் 10 லட்சமாகும் வரை காத்திருந்தது unseen காட்சிகளில் வெளியாகி உள்ளது.

ரியோ பெட்டியை எடுப்பான் அதனால் தான் நான் எடுத்தேன் என கேபி சோம்மிடம் சொல்லிய நிலையில் அர்ச்சனா குரூப்பின் பேச்சே ரியோவை பெட்டி எடுக்க தூண்டியது தெரியவந்துள்ளது.நிஷா மற்றும் அர்ச்சனா ரியோவிடம் ஆரி தான் வெற்றியாளர். வேறு யாராலும் வெற்றி பெற முடியாது, எப்போதோ வெற்றி உறுதியாகி விட்டது என பல முறை கூறியுள்ளனர்.

இதனை மனதில் எடுத்துக் கொண்ட ரியோ பெட்டியுடன் வெளியேற முடிவு செய்துள்ளார். 10 லட்சம் வரும்.வரை காத்திருக்க பெட்டியை 5 லட்சத்துடன் கேபி எடுத்துள்ளார்.இதனால் தான் சண்டை மூண்டு சமாதானமாகி உள்ளது.!!