" "" "

இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள பிக் பாஸ் 4 பைனல் சூட்டிங்.!! பாலாஜிக்கு கொடுக்கப் பட்ட விருது.!! எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய ஏமாற்றம்.!!

பிக் பாஸ் நிகழ்ச்சி சூட்டிங் தற்போது இறுதி கட்டத்தை நெறுங்கி உள்ளது. இன்னும் சில நிமிடங்களில் வெற்றியாளர் அறிவிக்கப் பட்டு விடுவார். இந்த நிலையில் ரசிகர்களுக்கு சில சர்பிரைஸ்களும் காத்திருக்கின்றது. சீசன் 3 போட்டியாளர்களான கவின், ஷெரின், முகேன் ஆகியோர் இன்றைய நிகழ்ச்சியில் விருந்தினராக வருகின்றனர். இவர்கள் தான் வீட்டிற்குள் சென்று போட்டியாளர்களை அழைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சில எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம் ஒன்று காத்திருக்கிறது என்று சொல்லலாம், அந்த ஏமாற்றம் என்ன என்பதை இன்னும் சற்று நேரத்தில் அறிந்துகொள்ளலாம். தற்போது சில விருதுகள் பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப் பட்டுள்ளன. அதில் சீசன் முழுவதும் சிறந்த முறையில் சமைத்து அசத்திய அர்ச்சனாவிற்கு

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

” the best cook award” கொடுக்கப் பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இந்த சீசன் முழுவதும் இவரால் தான் பிக் பாஸ் சூடு பிடித்தது என்று கூறும் அளவிற்கு மனதில் பட்டதை உடனே பேசி, பொய் முகம் இல்லாமல் கோபப் பட்டு, கெட்ட பெயர் எடுத்தாலும் இது தான் என்பதை காட்டி 105 நாட்களை சிறப்பாக விளையாடிய பாலாஜி முருகதாஸ் அவர்களுக்கு ” Man Of The Series Award” கொடுக்கப் பட்டுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் மிகப் பெரிய ஏமாற்றம் ஒன்றை சந்திக்கப் போவதாக கூறி வருகின்றனர். இன்றைய நிகழ்ச்சியில் லொஸ்லியா வருவதாக கூறப்படுகின்றது, ஆனால் இது வரை லொஸ்லியாவின் ஷூட் செய்யப் படவில்லை. அதனால் லொஸ்லியா வருகிறாரா இல்லையா என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை, பொறுத்திருந்து பார்க்கலாம், இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே மீதம் உள்ளது.!!