" "" "

5 மாத கர்ப்பிணி மனைவியை இரவு பகலாக தாம்பத்திய உறவில் இருக்க கட்டாய படுத்திய கணவன்.!! மனைவி கொடுத்த கொடூர தண்டனையால் சடலமான கணவர்.!!

மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்ட பின் பாலியல் ஆசை அதிகரித்து இரவு பகலாக தொல்லை கொடுத்து வந்த கணவரை மனைவி விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூரிலுள்ள அந்தியூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார். 35 வயதான நந்தகுமாருக்கு சொந்தமாக காணி, நிலம் உள்ளது, தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்துகொள்ளும் நந்தகுமார், தனியார் மாவு மில் ஒன்றில் வேலை பார்த்தும் வந்துள்ளார்.

சிறந்த தொழிலாளியான நந்தகுமாருக்கு கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு பவானி, பெரிய மோளப்பாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து வைத்தனர். நந்தகுமார் திருமணம் செய்யாதவர் ஆனால் அவருக்கு திருமணம் செய்து வைத்த பெண்ணுக்கு 15 வயதில் பெற்றோர் திருமணம் செய்து வைத்து பின் அந்த திருமணம் விவாகரத்து ஆகியுள்ளது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ஏற்கனவே திருமணம் ஆனால் கூட நந்தகுமாரின் மனைவியின் அழகு குறையவில்லை. திருமணமான புதிதில் தாம்பத்திய உறவு நந்தகுமாருக்கு பிடிக்கவில்லை. இதனால் மருத்துவ சிகிச்சை பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் எடுத்துள்ளார். ஆனால் சிகிச்சை நந்தகுமாரின் ஆசையை அதிகரிக்க மனைவியை தொல்லை செய்ய ஆரம்பித்துள்ளார்.

கர்ப்பமான மனைவிக்கு கணவரின் தொல்லை கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவு பகல் வேலைக்கு செல்லாமல் மனைவிக்கு தொல்லை கொடுத்துள்ளார். இதனால் கடுப்பான மனைவி தோட்டத்திற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குழம்பில் கலந்து கணவருக்கு கொடுத்துள்ளார்.

சாப்பிடும் போது உணவு கசப்பதாக கணவர் கூற அதெல்லாம் ஒன்றும் இல்லை என சாப்பிட கொடுத்துள்ளார். சாப்பிட்டதும் திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டார் நந்தகுமார்.

இவரது ரத்தத்தில் விஷம் கலந்துள்ளதாக டாக்டர்கள் கூறிய நிலையில் உயிருக்கு போராடிய கணவர் மனைவி தான் விஷம் வைத்து கொடுத்தார், எனக்கு சந்தேகம் வந்த போதும் மனைவி செய்யமாட்டார் என நம்பி சாபிட்டேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துள்ளார்..

இதனை தொடர்ந்து பொலீஸார் மனைவியிடம் நடத்திய விசாரணையில் கணவன் ஒரு நாளைக்கு பலமுறை உறவில் ஈடுபட்டதால் கோபத்தில் செய்ததாக தெரிவித்துள்ளார். நந்தகுமாரின் செயல் குழந்தையை பாதிக்க கூடாது என்ற பயம் ஏற்படதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.!!