" "" "

அழகிய ஹீரோக்களாக வளர்ந்துவிட்ட சின்ன மற்றும் பெரிய காக்கா முட்டைகள்.! வீடியோ வெளியிட்டு வியக்க வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்.!

6 வருடங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் காக்கா முட்டை . சினிமாவில் ஹீரோயினாக நடிக்க விரும்பினால் அக்கா, அண்ணி, தங்கை கதாபாத்திரங்களை கூட விரும்பாதவர்கள் மத்தியில் 2 பிள்ளைகளின் தாயாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த இந்த திரைப்படம் உலக அளவில் பேசப் பட்டது.

திரைப்படம் முழுவதும் இரண்டு சிறுவர்களை சுற்றியே இருக்கும். இந்த திரைப்படத்தில் J விக்னேஷ் பெரிய காக்கா முட்டையாகவும். v. ரமேஷ் சின்ன காக்கா முட்டையாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருப்பார்கள். ஏழை சிறுவர்களின் நிஜ வாழ்க்கையை அப்படியே கண்முன் காட்டிய “காக்கா முட்டை” திரைப்படம் இன்று வரை கொண்டாடப் படுகின்றது.

ஆனால் இந்த ஆறு வருடத்தில் காக்கா முட்டைகள் இருவருமே வளர்ந்து விட்டனர். திரைப்படம் வெளியாகி 6 வருடங்கள் கடந்த நிலையில் தாயாக நடித்த ஐஸ்வர்யா இன்ஸ்ட்டாகிராம் லைவ் வந்ததுடன் சின்ன மற்றும் பெரிய காக்கா முட்டைகளை லைவ்வில் இணைத்துள்ளார். இவர்களை பார்த்த ரசிகர்கள் அட நம்ம சின்ன மற்றும் பெரிய காக்கா முட்டைகளா இவர்கள் என வியந்து வருகின்றனர்.!!