" "" "

வயிற்றில் இருக்கும் போதே கண்ணாமூச்சி ஆடி ஸ்கேனில் கூட சிக்காத குழந்தைகள்! ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்ற தாயின் அனுபவ பகிர்வு.!!

இன்றைய தினம் தென் ஆப்பிரிக்கா கவுடெங் மாகாணத்தைச் சேர்ந்த கோசியாம் தாமரா சித்தோல் என்ற பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்று உலக சாதனை பெற்றுள்ளார். இவருக்கு முன்பதாக இந்த சாதனையை வட அமெரிக்காவின் மொராக்கோ நகரைச் சேர்ந்த மாலியன் ஹலிமா சிஸ்ஸே என்ற பெண் 9 குழந்தைகள் பெற்று உலகிலேயே ஒரே பிரசவத்தில் அதிக குழந்தை பெற்ற பெண் என்ற சாதனையை நிகழ்த்தியிருந்த நிலையில் அந்த சாதனையை கோசியாம் தாமரா சித்தோல் 10 குழந்தைகள் பெற்று தனதாக்கிக் கொண்டார்.

அறுவை சிகிச்சை மூலம் இவருக்கு 7 ஆண் குழந்தைகளும் 3 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளது. இவருக்கு ஏற்கனவே 6 வயதில் இரட்டை குழந்தைகள் உள்ள நிலையில் 10 குழந்தைகள் பற்றி கூறுகையில் என் குழந்தைகள் அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கிறது இதற்கு இறைவனுக்கும் , டாக்டர்கள், தாதிமார்களுக்கும் நன்றி. நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்.

என் வயிற்றில் 10 குழந்தைகள் இருப்பது டாக்டர்களுக்கு கூட தெரியாது ஆரம்பத்தில் 5 குழந்தைகள் இருந்தது. பின்னர் 7 குழந்தைகள் ஸ்கேனில் காட்டியது. டாக்டர்கள் 8 குழந்தை இருக்கலாம் என கூறினார்கள். ஆனால் 10 குழந்தைகள் என டாக்டர் கூறிய போது என் மகிழ்ச்சியை என்னால் கட்டுப் படுத்த முடியவில்லை. குழந்தைகள் வயிற்றில் இருந்த போது என்னால் எழுந்து வேலைகள் செய்ய முடியாமல் இருந்தது,

என்னை குழந்தை போல் என் கணவர் டெபோஹோ சோடெட்சி பார்த்துக் கொண்டார் அவருக்கு நன்றி என்பதற்கு பதில் பரிசாக 10 குழந்தைகளை கொடுத்திருக்கிறேன் என்றார். அவரது கணவரிடம் கேட்ட போது மகிழ்ச்சியை என்னால் கூற முடியவில்லை உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான அப்பா நான் தான் என தெரிவித்துள்ளார்.!