" "" "

எப்போதும் சர்ச்சை & கவர்ச்சி நாயகியாக இருக்கும் நடிகை கஸ்தூரியின் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா.? அவரே கூறிய உண்மை விடயம்.!!

நடிகை கஸ்தூரி, 90 களில் தனக்கென தனியிடம் பிடித்திருந்தார். திருமணத்தின் பின் சினிமா துறையைவிட்டு தூரம் சென்றாரா அல்லது சினிமா துறை விரட்டி விட்டது அது வழமை தானே. பின்பு சில காலம் ஓய்ந்து இருந்தவர் மீண்டும் பரபரப்பாகினார். சமூக வலைத்தளங்கள் தான் கஸ்தூரியை பிரபலமாக்கியது என்று கூட சொல்லலாம். யாரை பற்றியும் கவலை படாது எந்த பிரபலமானாலும் கலாய்த்து தள்ளுவார். இதனால் பல விமர்சனங்ககுக்கும் ஆளானார்.

எந்த நேரமும் பரபரப்பாக இருக்கும் கஸ்தூரி தனக்கு ஏற்பட்ட கண்ணீர் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவரது மூத்த மகள் சில நாட்களாக உணவு உண்ன முடியாமல் தவித்துள்ளார்.வைத்திய பரிசோதனை செய்த போது மருத்துவருக்கு சந்தேகம் வரவே கஸ்தூரியிடம் புற்று நோய்க்கான அறிகுறிகள் இருக்கிறது என கூறியுள்ளார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

வைத்திய பரிசோதனையில் ஏதோ தவறு என நினைத்து நண்பர் ஒருவரின் மூலம் பரிசோதனை செய்த போது புற்றுநோய் உறுதியாகி உள்ளது. அதன் பின் கணவர் மருத்துவர் என்பதால்.. 3 வருடம் தொடர்ந்து சிகிச்சை அளித்து அதன் பின் 5 ஆண்டுகால அருகில் இருந்து கவனிப்பின் பின் புற்று நோய் முற்றாக குணமடைந்ததாக கூறினார்கள். அதன் பின்பே என் உயிர் வந்தது என கூறியுள்ள கஸ்தூரி. கெமொதெராபி சிகிச்சையின் போது முற்றுமுழுதாக மொட்டையாகிய தலை.

வித்தியாசமான முகம் பார்க்கவே கண்ணீரை வரவழைத்தது. ஏன் வாழ்கிறேன் என தோன்றியது.ஒரு கட்டத்தில் இறந்து விடலாம் என்றும் தோன்றியது. ஆனால் என் குழந்தையை போன்று பல குழந்தைகள் தவித்துக்கொண்டிருந்தார்கள்.

அவர்களது பெற்றோர் குழந்தைகளின் உயிரை காப்பாற்ற போராடிக்கொண்டிருந்தார்கள். அப்படியானால் நான் ஏன் கோழையாக வேண்டும்? என முடிவு செய்து தற்கொலை முடிவை மாற்றிக் கொண்டேன் இப்போது மகிழ்ச்சியாக வாழ்கிறேன் என கூறினார்..!