" "" "

குக் வித் கோமாளி புகழ் மணிமேகலைக்கு ஏற்பட்ட விபத்து.! 2 அல்லது 3 வாரங்களுக்கு குக் வித் கோமாளி வர முடியாது என தெரிவிப்பு.! நடந்தது இது தானாம்.!

இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது என தொகுப்பாளினி மணிமேகலை கூறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான மணிமேகலை அதன் பின் சீரியல்களில் நடித்தார்.

ஹுசைன் என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களின் திருமணத்திற்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு இருந்த போதும் தற்போது இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே மணிமேகலைக்கு கிடைத்த அதிர்ஷடம் என்றால் அது குக் வித் கோமாளி தான்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இந்த நிகழ்ச்சியில் மணிமேகலைக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறார்கள். இன்னும் சின்ன பிள்ளையாக இருக்கும் மணிமேகலைக்கு சமைக்க வராது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். சமையல் தெரியாமல் மணிமேகலை செய்யும் அட்டகாசங்கள் நிகழ்ச்சியில் மட்டும் இன்றி நிஜ வாழ்வில் இடம்பெற்று வருகிறது.

ஏற்கனவே குக்கர் வெடித்து ஒட்டுமொத்த சாப்பாடும் கொட்டியது நாம் அறிவோம், நேற்றைக்கு முன் தினம் சுடு தண்ணீர் வைத்து இறக்க முயன்ற மணி மேகலையின் கை தவறியதால் தண்ணீர் கொட்டியுள்ளது. இதனால் சிறு விபத்து ஏற்றபட 2 அல்லது மூன்று வாரங்களுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.!!