" "" "

10 வருடங்களாக தனக்கு திருமணமானதை மறைத்த தொகுப்பாளர் ரக்‌ஷன்.! உண்மை காரணம் என்ன இதோ அவரே வெளியிட்ட பதிவு.!!

திருமணமாகி 10 வருடங்கள் தனக்கு திருமணமானதை தொகுப்பாளர் ரக்‌ஷன் மறைத்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2011ம் ஆண்டு காதலித்த பெண்ணையே திருமணம் செய்துள்ளார் ரக்‌ஷன். ஆனால் கடந்த வாரம் வரை ரக்‌ஷனுக்கு திருமணமானது ரசிகர்களுக்கு தெரியாது.

பிரபலங்களுக்கு திருமணம் ஆனால் சில நாட்களிலேயே தெரிய வந்துவிடும், ஆனால் ரக்‌ஷனின் திருமணம் மறைக்கப் பட்டே இருந்தது எப்படி என்பது யாருக்கும் தெரியவில்லை. 2016ம் ஆண்டு தொகுப்பாளினி ஜாக்குலினுடன் தகாத உறவு என கிசுகிசுக்கப் பட்டார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

பின்னர் 2018 பிக் பாஸ் ஜூலியை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற செய்திகள் வெளியானது, அண்மையில் விஜே சித்ராவின் மரணத்திற்கும் ரக்‌ஷனுக்கும் சம்மந்தம் இருப்பதாக கூறப்பட்டது, ஆனால் இத்தனை சர்ச்சையின் போதும் ரக்‌ஷன் தனக்கு திருமணம் ஆனதை கூறவே இல்லை.

இந்த நிலையில் தனக்கு திருமணம் ஆனதை ஏன் வெளிப்படுத்தவில்லை என ஒற்றை வார்த்தையில் பதில் அளித்துள்ளார் ரக்‌ஷன், எங்கள் காதல் உண்மை, நாம் உண்மை என்றால் ஏன் அதனை கூறிக்கொண்டிருக்க வேண்டும்.? சொல்லிக் கொண்டிருப்பது தான் காதல் வாழ்க்கையா? திருமணமாகி 10 வருடங்கள் ஆனாலும் நாம் இன்னும் காதலர்கள் தான் என தெரிவித்தார். அண்மையில் ரக்‌ஷனுக்கு குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத் தக்கது.!!