விற்பனைச் சந்தையில் ராயல் என்ஃபீல்டின் 650 சிசி மோட்டார் சைக்கிள்கள்!
ரோயல் என்பீல்டை நம்மில் பலருக்கும் தற்போது அதிகமாகவே தெரியும். இது இந்தியாவின் மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களில் முன்னணி நிறுவனம் ஆகும். அமெரிக்காவில் ராயல் என்ஃபீல்டின் புதிய பைக்குகளின் விலை குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அத்தோடு தற்போது இந்த நிறுவனத்தின் புதிய மாடல் விற்பனைச் சந்தைக்கு வந்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்ட்டல் ஜிடி 650 ஆகிய பைக்குகள், அமெரிக்கச் சந்தையில் அறிமுகமாகிவிட்டன. இரு சிலிண்டர்களுடன் கூடிய 650 சிசி எஞ்சின் திறன் கொண்ட ராயல் என்ஃபீல்டின் இரு இருசக்கர வாகனங்கள் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தன. இண்டர்செப்டார் 650 (interceptor) காண்டினெண்டல் GT 650 (continental) ஆகிய இருசக்கர வாகனங்கள் இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டவை.
அமெரிக்கச் சந்தையைப் பொறுத்தவரை, ராயல் என்ஃபீல்டு மாடல் பைக்கிற்கு 3 ஆண்டுகள் வாரண்டி மற்றும் ரோட்சைடு அசிஸ்டென்ஸ் (RSA) அளிக்கப்படுகிறது. அமெரிக்காவில் ஏற்கனவே உள்ள கிளாஸிக் 500ஐ விட, 650 மாடல்கள் ரூ.22,000 அதிகம் ஆகும்.
இவை தற்போது அமெரிக்காவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இண்டர்செப்டார் 650-ன் விலை இந்திய மதிப்பில் 4 லட்சத்து 21 ஆயிரம் ரூபாயாகவும், காண்டினெண்டல் 650-ன் விலை 4 லட்சத்து 36 ஆயிரம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த வாகனங்கள் ஆண்டிறுதிக்குள் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் விலை இங்கு 3 லட்சத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”