" "" "

மிக மோசமான கெட்ட பழக்கத்தை கை விட்ட நடிகர் சிம்பு.! ஒருவருடம் நிறைவடைந்து விட்டதாம்..என்ன பழக்கம்னு நீங்களே பாருங்கள்.!!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 30 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. 38 வயதாகும் சிம்பு அதே இளமை அழகுடனும் அதிக ரசிகர்களுடனும் இருப்பது வியப்பு தான். காதலித்து தோற்றதாலோ என்னவோ இது வரை திருமணம் சிம்புவிற்கு திருமணம் சரி வரவில்லை, இன்று நாளை என பேசப்பட்டாலும் இது வரை திருமணம் தொடர்பான உறுதியான தகவல் இல்லை.

இந்த நிலையில் நேற்றைய தினம் திடீரென ரசிகர்களை லைவ் சாட் மூலம் சந்தித்தார் சிம்பு இதில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். இதன் போது தனக்கு இருந்த கெட்ட பழக்கம் ஒன்றை விட்டு ஒரு வருடம் ஆகிவிட்டதாகவும் கூறியுள்ளார். ரசிகர்கள் இது பற்றி கேட்ட போது உங்களை போல் தான் நானும் யாரையாவது கலாய்ப்பது, சரியான நேரத்திற்கு எதையும் செய்யாமல் ஊர் சுற்றுவது, மது, புகைத்தல், ஏன் சூட்டிங் கூட சரியான நேரத்திற்கு செல்லாமல் பிரச்சனைகள் வந்தது.

தவறு செய்யாத மனிதர்கள் யார் இருக்கிறார்கள்.? நானும் தவறு செய்தேன் ஆனால் இப்போது திருந்தி வருகிறேன். நான் குடி போதை பழக்கத்தை கைவிட்டு ஒரு வருடம் ஆகிறது இன்றுடன் என தெரிவித்ததுடன் எனக்கு மது பழக்கத்தை கை விட்டதால் எந்த பாதிப்பும் இல்லை, மகிழ்ச்சி அதிகரித்திருக்கின்றது. எனது நண்பர்களையும் மதுவில் இருந்து விலகி இருக்கவே வைத்துள்ளேன்.ஒரு சில கெட்ட பழக்கங்களை விட்டால் நாம் மட்டும் அல்ல நம்மை சுற்றி இருப்பவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.!