BMW காருக்குள் குடும்பம் நடத்தும் ஷிவானி.! பணம் இருந்தால் இப்படியும் வாழலாம் போல என திட்டி தீர்க்கும் ரசிகர்கள். வைரலாகும் புகைப்படம் இதோ!!
தாயார் BMW கார் வாங்கி கொடுத்ததில் இருந்து இன்று வரை ஷிவானி காரில் குடும்பம் நடத்தி வருவதாக ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். பகல் நிலவு, இரட்டை ரோஜா, போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ஷிவானி இன்ஸ்ட்டாகிராமின் 4 மணி நாயகியாக வலம் வந்தார்.
இதனால் இவருக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் உருவாகியது. இவருக்கு அதிக ரசிகர்கள் இருப்பதால் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது, இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஷிவானி பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று 96 நாட்கள் வரை இருந்து வெளியேறினார்.
அதன் பின் திரைப்பட வாய்ப்புகள் வர நடித்து வரும் ஷிவானி நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக திரைபடம் ஒன்றிலும் நடித்து வருகிறார் இந்த நிலையில் கடந்த மாதம் ஷிவானியின் தாய் ஷிவானிக்கு கார் ஒன்றை பரிசளித்தார். இந்த கார் கொடுத்ததில் இருந்து ஷிவானி காரில் தான் வாழுகிறாராம்.
உறங்குவது, டீ குடிப்பது, விளையாடுவது என அனைத்தையும் காருக்குள் செய்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் காருக்குள் குடும்பம் நடத்துகின்றீர்களா, கார் தான் கணவன் போல என கிண்டல் அடித்து வருகின்றனர்!