" "" "

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஷிவானி முதல் முதல் போட்ட பதிவு.,!! இவர் வெற்றியாளராக இவர் தான் வர வேண்டுமாம்.!!

பிக் பாஸ் வீட்டை விட்டு நேற்றைய தினம் ஷிவானி நாராயணன் வெளியேற்றப் பட்டார். இது போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்தது, காரணம் ஆரம்பத்தில் இருந்து ஷிவானி சரியாக விளையாடவில்லை என்ற குற்றச் சாட்டு ரசிகர்களிடம் இருந்துவந்தது. அது மட்டும் இன்றி வீட்டு வேலைகள் எதையும் செய்கிறார் இல்லை, யார் எது சொன்னாலும் அமைதியாக இருக்கிறார், ப்ரோமோவுக்கு வரவில்லை, ஓய்வு அறைக்கு பல முறை அனுப்பப் பட்டவர்.

அப்போதெல்லாம் கவலையின்றி சின்ன பிள்ளை போல் மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால் ப்றீஸ் டாஸ்கின் போது ஷிவானியின் தாயார் வந்து அவரை லெப்டு ரைட்டு வாங்கிவிட்டார்..விளையாடுவது இல்லை, எப்போதும் பாலாவின் இன் சுற்றுவது என்று அம்மா திட்டினார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இதனால் தன்னை நிரூபிக்க நினைத்த ஷிவானி இறுதி டாஸ்குகளில் சிறப்பாக விளையாடினார். கயிறு டாஸ்கின் போது ஷிவானி தனது முழு திறமையையும் காட்டினார். கண்கெட்ட பின் சூர்ய நமஸ்காரம் போல் அனைத்தும் வீணாது. நேற்றைய தினம் வெளியேற்றப் பட்டு விட்டார். வெளியேறிய ஷிவானி முதல் முறை போட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது..

அதில் “பிக் பாஸ் வீட்டில் யாருடனும் நான் சண்டை போடவில்லை, யாருடனும் கோபமும் இல்லை. மகிழ்ச்சியாக இருந்தேன் அவ்வளவு தான். பிக் பாஸ் வீட்டில் ரம்யா பாண்டியன் வெற்றி பெற்றால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என குறிப்பிட்டுள்ளார்.!