" "" "

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ள எஸ் பி பாலசுப்பிரமணியம்..! நலம்பெற பிரார்த்தனை செய்யும் ரசிகர்கள்…!!

ரசிகர்களால் கொண்டாடப் படும் பாடகர்களில் முதல் இடத்தில் இருப்பவர் எஸ்பிபி என எல்லோராலும் செல்லமாக அழைக்கப் படும் எஸ் பி பாலசுப்பிரமணியம். ஏராளமான விருதுகள் , எல்லா மொழியிலும் படல்கள் என பாடி அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

தற்போதும் பாடிக் கொண்டிருக்கும் பாலசுப்பிரமணியம் அண்மையில் வெளி நாடு ஒன்றிற்கு சென்று வந்தார். இந்த நிலையில் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி படுத்தப் பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ள எஸ் பி பி இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எனக்கு சாதாரண அறிகுறிகள் மட்டுமே இருந்தது. நான் முதலில் பெரிதாக கண்டுகொள்ளவில்லை , ஆனால் இந்த அறிகுறிகள் தான் கொரொனா என்பதை உணர்ந்த பின் உடனடியாக பரிசோதனை செய்துகொண்டேன்,

உறுதியானதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளேன். தற்போது சரியான சிகிச்சை கிடைக்கிறது, சீக்கிரம் குணமாகிவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. பயம் வேண்டாம் உங்கள் பிரார்தனைகளுக்கு நன்றிகள் என தெரிவித்துள்ளார்..!

View this post on Instagram

Thanks for your prayers …

A post shared by SP Balasubrahmanyam (@ispbofficial) on