" "" "

நபர் ஒருவருடன் தாடி பாலாஜியின் மனைவி.! வைரலாகும் வீடியோவால் மீண்டும் சர்ச்சையில் நித்யா.!!

கடந்த சில வருடங்களுக்கு முன்பு மீடியாக்களில் வைரலானவர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா. தாடி பாலாஜி ஏற்கெனவே திருமணமாகி மனைவி இறந்த நிலையில் நித்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு போஷிகா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில் பாலாஜி நித்யாவை கொடுமை செய்வதாக நித்யா பொலீஸில் புகார் அளித்தார்.

ஆனால் பாலாஜியோ நித்யாவிற்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக கூறினார். இந்த பிரச்சனை நீண்ட நிலையில் இருவரும் பிரிந்தனர். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொண்டனர், அதன் பின் இருவரும் சேர்ந்து வாழுவார்கள் என எதிர்பார்க்கப் பட்டனர்.

ஆனால் இருவரும் மறுபடி பிரிந்தனர். நித்யா ஜிம் ரெயினர் ஒருவருடன் மீண்டும் ஊர் சுற்றி சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நித்யா. இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் இளைஞருடன் டிக் டாக் செய்துள்ள நித்யா அதனை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த பலரும் கணவரை விரட்டி விட்டு விட்டு இந்த கேவலம் தேவையா என திட்டி தீர்த்து வருகின்றனர்.!