" "" "

இன்றைய ராசி பலன் – 11.01.2021

11-01-2021, மார்கழி 27, திங்கட்கிழமை, திரியோதசி திதி பகல் 02.33 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. கேட்டை நட்சத்திரம் காலை 09.09 வரை பின்பு மூலம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது.இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

மேஷ ராசி நேயர்களே:

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

காலை 09.09 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னை கள் ஏற்பட்டு நீங்கும். விமர்சனம் கண்டு அஞ்சாதீர்கள். வீண்செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை தோன்றும்.அவசியத் தேவை என்றாலும்கூட கடன் வாங்க வேண்டாம்.யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம்.

ரிஷப ராசி அன்பர்களே:

ராசிக்கு காலை 09.09 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் வரவேண்டிய தொகை கிடைப்பதில் கால தாமதம் உண்டாகும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படக்கூடும்.பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும்.எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.

மிதுன ராசி காரர்களே:

சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும்.எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். வழக்கில் திருப்பம் ஏற்படும். கடன் பிரச்னைகள் சுமுகமாக முடியும்.குடும்பத்தில் இனிய நிகழ்ச்சிகள் நிகழும்.

கடக ராசி நேயர்களே:

வியாபாரத்தில் கடமையுணர்வுடன் செயல்படுவீர்கள்.பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியா கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை தரும்.நண்பர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள்.சக வியாபாரிகள் அனுசரணையாக இருப் பார்கள்.கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்

சிம்ம ராசி அன்பர்களே:

மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள்.மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படும் என்பதால் பொறுமை அவசியம்.தாயாருக்கு கை கால் வலி வந்து போகும்.எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

கன்னி ராசி காரர்களே:

தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும்.

துலாராசி உறவுகளே:

அழகும் இளமையும் கூடும்.பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். கொடுக்கல் வாங்கலில் நல்ல லாபம் கிடைக்கும்.அனுசரித் துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் போட்டிகள் குறையும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியில் செல்ல நேரிடும்.குடும்பத்தில் நிம்மதி உண்டு. தக்க முன்னெச்ச ரிக்கை அவசியம்.

விருச்சிக ராசி நேயர்களே:

சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும்.உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம்.சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதங்கள் ஏற்படும்.முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.திடீர் பணவரவு உண்டாகும்.

தனுசு ராசி அன்பர்களே:

உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.உற்றார் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.அரசு காரியங்கள் தாமதமாகி முடியும்.

மகர ராசி காரர்களே:

பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். செலவுகள் அதிகரித்தாலும் அதனால் மகிழ்ச் சியே உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும்.

கும்ப ராசி உறவுகளே:

பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறிக்குப் பிறகுதான் முடியும்.பிள்ளைகள் கேட்டதை வாங்கி தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மீன ராசி நேயர்களே:

கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும். சகோதரர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகள் மூலம் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.லாப மும் அதிகரிக்கும்.