" "" "

இன்றைய ராசி பலன் – 16.07.2021

இன்றைய பஞ்சாங்கம், 16-07-2021, ஆனி 32, வெள்ளிக்கிழமை, சஷ்டி திதி காலை 06.06 வரை பின்பு சப்தமி திதி பின்இரவு 04.34 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 02.37 வரை பின்பு சித்திரை. அமிர்தயோகம் பின்இரவு 02.37 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. தட்சிணாயன புண்யகாலம் ஆரம்பம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேஷ ராசி நேயர்களே:உறவினர் நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.திடீர் பயணங்கள் செல்ல நேரிடும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.

மிதுன ராசி காரர்களே:குடும்பம் தொடர்பான பிரச்னை ஒன்று சுமுகமாக முடியும்.குடும்பத்தில் தேவையில்லாத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட சிறுசிறு பிணக்குகள் மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும்.உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும்.வாழ்க்கைத்துணை மூலம் பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும்.

கடக ராசி நேயர்களே:திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.குடும்பத்தில் உள்ளவர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை தரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.

சிம்ம ராசி அன்பர்களே:எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். வியாபாரத்தில் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும்.நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும்.

கன்னி ராசி காரர்களே:சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலை விஷயமாக செல்லும் வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும்.

துலாராசி உறவுகளே:யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வாழ்க்கைத்துணை மூலம் எதிர் பார்த்த காரியம் முடிவது மகிழ்ச்சி தரும்.குடும்பத்தில் பெரியவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். நண்பர்கள் மூலம் ஆதா யம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொத்துப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள்.கடன் பிரச்சினை தீரும்.

விருச்சிக ராசி நேயர்களே:பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும்.உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக் கவும்.நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். தந்தைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும்.

தனுசு ராசி அன்பர்களே:புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்.அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் வீட்டில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மற்றவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும்.வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே காணப்படும்.

மகர ராசி காரர்களே:பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும்.குடும்பத்தில் அமைதி நிலவும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். மாலையில் தாய்வழி உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.

கும்ப ராசி உறவுகளே:சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. திடீர் செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும்.மற்றவர்கள் பிரச்னையில் தலையிடுவதால் வீண்பழிச் சொல் ஏற்படக்கூடும். முக்கிய முடிவு களை ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.வேலைச்சுமையால் உடல் அசதி மனச்சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே இருக்கும்.

மீன ராசி நேயர்களே:

பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.கடன்களைத் தந்து முடித்து நிம்மதியடைவீர்கள். ஆடை ஆபரணம் சேரும். மனைவி வழியில் ஆதரவு பெருகும்.கணவன் – மனைவிக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள்.