" "" "

இன்றைய ராசி பலன் – 23.07.2021

இன்றைய பஞ்சாங்கம், 23-07-2021, ஆடி 07, வெள்ளிக்கிழமை, சதுர்த்தசி திதி பகல் 10.44 வரை பின்பு பௌர்ணமி. பூராடம் நட்சத்திரம் பகல் 02.25 வரை பின்பு உத்திராடம். பிரபலாரிஷ்ட யோகம் பகல் 02.25 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி விரதம். குரு பூர்ணிமா. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேஷ ராசி நேயர்களே:சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.தந்தையின் உடல் நலனில் கவனம் தேவை.உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். தெய்வப் பணி களில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம்.

ரிஷப ராசி அன்பர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம்.முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் உண்டு.அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். உடல்நலனில் கவனமாக இருக்கவும்.

மிதுன ராசி காரர்களே:திருமணப் பேச்சு வார்த்தை கைகூடிவரும். செலவுகள் அதி கரிக்கும் என்றாலும் அதனால் மகிழ்ச்சியே ஏற்படும்.உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தாயாரின் உடல்நிலை சீராகும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் அனுகூலமாக முடியும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.

கடக ராசி நேயர்களே:விருந்தினர் வருகையால் வீடு களைக் கட்டும்.வாகனத்தில் செல்லும்போது சற்று கவனமாக இருக் கவும்.நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.பயணங்களால் பயனடைவீர்கள். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறை வேற்றும் வாய்ப்பு ஏற்படும்.பிள்ளைகள் பெருமை படும்படி நடந்து கொள்வார்கள்.வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

சிம்ம ராசி அன்பர்களே:பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். தாய்மாமன் வழியில் சுபச்செய்தி வரும்.குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அக்கம்பக்கத்தில் இருப் பவர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவுமிருக்காது. குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும்.உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும்.

கன்னி ராசி காரர்களே:எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

துலாராசி உறவுகளே:உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.சகோதர வகையில் மகிழ்ச்சியுடன் ஆதாயமும் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கை நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

விருச்சிக ராசி நேயர்களே:ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். கணவன் – மனைவிக்கிடையே மனஸ்தாபம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.கடன் பிரச்சினைகள் குறையும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள்.

தனுசு ராசி அன்பர்களே:பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும்.குடும்பத்தில் எதிர் பாராத செலவுகள் வந்து போகும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கும். உத்தி யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும்.வியாபாரம் வழக்கம் போல நடைபெறும்.எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும்.

மகர ராசி காரர்களே:பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும்.நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். தாயின் தேவையை நிறைவேற்ற சற்று அலைச்சல் ஏற்படும்.சகோதர வகையில் சங்கடங்கள் வரும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும்.பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

கும்ப ராசி உறவுகளே:தந்தை வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள்.குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மாற்று கருத்துக்கள் நீங்கும். சகோதர வகையில் எதிர்பாராத செலவு ஏற்படும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள்.வாழ்க்கைத்துணையின் உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.வாழ்க்கைத்துணையின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

மீன ராசி நேயர்களே:

பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வாழ்க்கைத்துணை யால் மகிழ்ச்சி உண்டாகும்.உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டுத் தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள்.வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. விருந்தினர் வருகை அதிகரிக்கும்.தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.