" "" "

இன்றைய ராசி பலன் – 23.11.2020

இன்றைய பஞ்சாங்கம், 23-11-2020, கார்த்திகை 08 , திங்கட்கிழமை, நவமி திதி இரவு 12.32 வரை பின்பு வளர்பிறை தசமி. சதயம் நட்சத்திரம் பகல் 01.04 வரை பின்பு பூரட்டாதி. சித்தயோகம் பகல் 01.04 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. தனிய நாள். வாஸ்து நாள். பகல் 11.09 மணிக்கு மேல் 11-45 மணிக்குள் புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

மேஷ ராசி நேயர்களே:

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

உறவினர்கள் வழியில் வீட்டில் சிறுசிறு பிரச் னைகள் ஏற்படக்கூடும்.பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.உங்களால் பயணடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் யோசனையை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்கள்.

ரிஷப ராசி அன்பர்களே:

நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்குக் குடும்பத்துடன் குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். குடும்பம் அல்லது வேலை தொடர் பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும்.

மிதுன ராசி காரர்களே:

வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும்வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.பணப்புழக்கம் கணிசமாக உயரும். சிலருக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தில் வீண் விவாதம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

கடக ராசி நேயர்களே:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.புது முயற்சிகள் வேண்டாம்.உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும்.குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள்.

சிம்ம ராசி அன்பர்களே:

அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் நிறைவேறும்.தந்தை யின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தினருடன் வெளியிடங்க ளுக்குச் சென்று வருவீர்கள்.கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.

கன்னி ராசி காரர்களே:

வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.முடிந்தவரை அவர்களின் விருப் பத்தை நிறைவேற்ற முயற்சி செய்யவும்.பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் வருகையால் திடீர் செலவுகள் ஏற்பட்டா லும் சமாளித்து விடுவீர்கள்.உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.

துலாராசி உறவுகளே:

வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். தாயின் அன்பு ஆறுதலாக இருக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும்.

விருச்சிக ராசி நேயர்களே:

தொழிலில் உள்ள போட்டிகள் விலகும்.கணவன் – மனை விக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும், தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை.

தனுசு ராசி அன்பர்களே:

தேவையற்ற இடமாற்றத்தால் மன உளைச்சல் உண்டாகும்.சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மாலையில் அருகிலுள்ள உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தாரின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள்.குடும்பப் பெரியவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம்.

மகர ராசி காரர்களே:

வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். ஒரு சிலருக்கு வெளியூரில் இருந்து எதிர் பார்த்த சுபச்செய்தி கிடைக்கக்கூடும்.கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். சிலருக்கு தெய்வப்பணிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம்.

கும்ப ராசி உறவுகளே:

அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

மீன ராசி நேயர்களே:

குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சிலருக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.அனாவசிய செலவுகளை குறைக்கப் பாருங்கள். தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள்.சுபகாரிய முயற்சிகளில் நற்பலன்கள் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட பிணக்குகள் நீங்கும்.