" "" "

இன்றைய ராசி பலன் – 24.07.2021

இன்றைய பஞ்சாங்கம், 24-07-2021, ஆடி 08, சனிக்கிழமை, பௌர்ணமி திதி காலை 08.07 வரை பின்பு பிரதமை திதி பின்இரவு 05.51 வரை பின்பு தேய்பிறை துதியை. உத்திராடம் நட்சத்திரம் பகல் 12.40 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

மேஷ ராசி நேயர்களே:பணப்பிரச்சினைகள் ஓரளவு குறையும்.தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைப்பது மகிழ்ச்சி தரும். நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும்.தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

ரிஷப ராசி அன்பர்களே:நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பாராத லாபம் உண்டாகும். தாய்வழி உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படும்.வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைப்பதற்கில்லை.

மிதுன ராசி காரர்களே: ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். வாக்குறுதி நிறைவேற்றப் போராடவேண்டி வரும். கண்டிக்காமல் அனுசரித்துச் செல்வது நல்லது.உத்தியோக ரீதியாக மனஉளைச்சல் ஏற்படும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சிலருக்கு வீட்டில் மராமத்துப் பணிகள் அதிகரிக்கும்.

கடக ராசி நேயர்களே:குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும்.எடுத்த காரியத் தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் கிட்டும்.காரியங்கள் அனுகூலமாக முடியும். உங்களின் திறமை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள்வரும். நண்பர்களுடன் ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும்.

சிம்ம ராசி அன்பர்களே: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும்.நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும்.குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கன்னி ராசி காரர்களே:அக்கம்-பக்கம்வீட்டாரின் ஆதரவு பெருகும்.வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். மனதில் அடிக்கடி குழப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் உங்கள் கைஓங்கும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.வேலையில் பணிச்சுமை அதிகமாகும்.

துலாராசி உறவுகளே: தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் மன ஸ்தாபத்துக்கு ஆளாக நேரிடும்.தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதற்கு வாய்ப்பு ஏற்படும்.வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள்.

விருச்சிக ராசி நேயர்களே:ள்ளைகளால் பயனடைவீர்கள். மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உறவினர் மூலம் கிடைக்கும் செய்தி உங்களை உற்சாகப்படுத்துவதாக இருக்கும்.உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும்.

தனுசு ராசி அன்பர்களே:உறவினர்கள் உங்களைப் புரிந்துக்கொள்வார்கள்.விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள்.வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். தாய்வழி உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும்.

மகர ராசி காரர்களே:யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.வாழ்க்கைத்துணையின் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.நண்பர்கள் உறவினர்கள் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.

கும்ப ராசி உறவுகளே:வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வாழ்க்கைத்துணை பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும்.வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும்.

மீன ராசி நேயர்களே:

எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். சிலருக்கு நவீன டிசைனில் புதிய ஆடைகளை வாங்கும் யோகம் உண்டு.உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும்ஏற்றுக் கொள்வார்கள். சிலருக்கு நண்பர்கள் வீட்டில் எளிய முறையில் நடைபெறும் சுபநிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள் ளும் வாய்ப்பு ஏற்படும். தெய்வ வழிபாட்டில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள்.