" "" "

இன்றைய ராசி பலன் – 27.07.2021

இன்றைய பஞ்சாங்கம்,27-07-2021, ஆடி 11, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 02.28 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. சதயம் நட்சத்திரம் பகல் 10.13 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. வாஸ்து நாள் காலை 07.30 மணி முதல் 08.06 மணி வரை. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேஷ ராசி நேயர்களே:பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே:உங்களால் வளர்ச்சி அடைந்தவர்கள் தற்போது உங்களை சந்திக்க நேரிடும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள்.உறவினர்கள் வழியாக சுப செய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

மிதுன ராசி காரர்களே:பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.திர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் கால தாமதம் உண்டாகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

கடக ராசி நேயர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். உறவினர்கள் நண்பர்களால் அன்புத் தொல்லைகள் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும்.எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாகும். உடல்நலனில் கவனம் தேவை.உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும்.

சிம்ம ராசி அன்பர்களே:பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். சிலருக்கு வீட்டில் அதிகரிக்கும் பொறுப்புகளின் காரணமாக உடல் அசதி உண்டாகும் .. மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர்களுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும்.விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் -சுபசெலவுகள் ஏற்படும்.

கன்னி ராசி காரர்களே:திருமண தடைகள் விலகும்.எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். சிலருக்கு வீட்டுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.பிள்ளைகள் படிப்பு சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். சிலருக்கு எதிர்பாராத பணவரவும், திடீர் செலவுகளும் ஏற்படும்.உங்களால் வளர்ச்சி அடைந்தவர்கள் தற்போது உங்களை சந்திக்க நேரிடும்.

துலாராசி உறவுகளே:நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சிலருக்குக் குடும்பம் தொடர்பான வேலையை முன்னிட்டு சற்று அலைச்சல் ஏற்பட லாம்.நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படக்கூடும். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படும்.பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிவீர்கள். உடன் பிறப்பிடம் ஒற்றுமை குறையும்.

விருச்சிக ராசி நேயர்களே:தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். சிலருக்கு வாழ்க்கைத் துணையுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். வீட்டில் ஒற்றுமை குறையலாம்.ஆகவே, ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.

தனுசு ராசி அன்பர்களே:சொத்துப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். பெற்றோருடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும்.வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வார்கள். சிலருக்கு இளைய சகோதரர்கள் மூலம் எதிர்பாராத ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. தொழில் ரீதயான பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

மகர ராசி காரர்களே:வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். சிலருக்குத் திடீர் பணவரவுக்கும் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.விருந்தினர்களின் வருகையால் வீடுகளை கட்டும். மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை.குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வார்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. தொழில் ரீதயான பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

கும்ப ராசி உறவுகளே:கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. எதிரிகள் மற்றும் பழைய கடன்கள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும்.உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சிலருக்கு வீண் அபவாதம் ஏற்படக்கூடும்.உறவினர்கள் சிலர் உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். மாலையில் சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள்.

மீன ராசி நேயர்களே:

. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். எதிர்பாராத செலவுகளால் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அலைச்சல் உண்டாகும். சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர்களால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.