" "" "

“நான் சாகப் போகிறேன், என்னை காப்பாற்றுங்கள்” வாட்சாப்பில் கதறியபடி வீடியோ வெளியிட்ட 22 வயது யுவதி.! குடும்பத்தினரின் மோசமான செயல்.!!

நான் சாக போகிறேன் காப்பாற்றுங்கள் என கதறியபடி வாட்சாப்பில் வீடியோ வெளியிட்ட பெண்ணை பொலீஸார் காப்பாற்றியுள்ளனர். சென்னையில் காவாங்கரை கண்ணப்பசாமி நகரை சேர்ந்தவர் பிர்தெளஸ் என்ற 22 வயது இளம்பெண்ணே பொலீஸாரால் காப்பாற்றப் பட்டுள்ளார். குறித்த பகுதியை சேர்ந்தவர் அன்சாரி, இவர் தனது மகளான பிர்தெளஸிக்கு திடீரென திருமண ஏற்பாடு செய்துள்ளார்.

தனது மனைவியின் சகோதரனையே பிர்தெளஸிற்காக இருவீட்டினரும் திருமண நிச்சயம் செய்துள்ளனர். திருமணத்தில் விருப்பம் இல்லை என பிர்தெளஸ் கூறியும் கேட்கும் நிலையில் இரு குடும்பமும் இல்லை. தற்கொலை செய்துகொள்வேன் என பிர்தெளஸ் மிரட்டிய போதும் பெற்றோர் கண்டுகொள்ளாமல் திருமண ஏற்பாட்டை செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த பிர்தெளஸ் வாட்சாப் குரூப்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் எனக்கு பிடிக்காத என்னை விட வயதில் மிக கூடியவருடன் பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்கின்றனர். எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை, இந்த திருமணம் நடந்தால் அடுத்த நொடியே நான் தற்கொலை செய்துகொள்வேன் தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள் என குறித்த வீடியோவில் கேட்டிருந்தார். வீடியோ வைரலானதை தொடர்ந்து இந்த வீடியோ புழல் மகளிர் காவல் நிலைய பொலீஸாரின் கவனத்திற்கு சென்றுள்ளது.

திருமணத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்பு வீடியோ கிடைத்ததை தொடர்ந்து உடனடியாக திருமணம் நடக்கும் இடத்திற்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தி பெண்ணை மீட்டுள்ளனர். திருமணம் தடுத்து நிறுத்தப் பட்டதன் பின் தன்னிடம் இருந்த விஷ பாட்டிலை பொலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார் பிர்தெளஸ். இதனால் திருமண வீட்டில் சிறு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.!!