இன்றைய ராசி பலன்! 07.01.2020

இன்றைய பஞ்சாங்கம்:07-01-2020, மார்கழி 22, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி பின்இரவு 04.15 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. கிருத்திகை நட்சத்திரம் பகல் 03.24 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் பகல் 03.24 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. முருக வழிபாடு நல்லது.இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

மேஷ ராசி நேயர்களே:

தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.விசேஷங்களை முன் னின்று நடத்துவீர்கள்.கடன் சுமை ஓரளவு குறையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். உறவினர்கள் வருகை சில சங்கடங்களை ஏற்படுத்தினாலும் பாதிப்பு இருக் காது.சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

ரிஷப ராசி அன்பர்களே:

நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. காலையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.திருமண முயற்சிகளில் இருந்த தாமத நிலை விலகி முன்னேற்றம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

மிதுன ராசி காரர்களே:

கணவன் – மனைவிக் கிடையே சிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டு உடனே சரியாகிவிடும். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க நேரிடும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள்.வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

கடக ராசி நேயர்களே:

குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நிலவும். நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியும் உற்சாகமும் பெறுவீர்கள்.. நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும்.உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள்.

சிம்ம ராசி அன்பர்களே:

தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சுப காரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும்.ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படக்கூடும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள்.பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள்.

கன்னி ராசி காரர்களே:

வாழ்க்கைத்துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட காலதாமதமாகும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.

துலாராசி உறவுகளே:

சந்திராஷ்டமம் தொடர்வதால் குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்ற சற்று அலையவேண்டி இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது.வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம்.பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள்.

விருச்சிக ராசி நேயர்களே:

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள்.சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும்.வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள்.

தனுசு ராசி அன்பர்களே:

. சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.

மகர ராசி காரர்களே:

பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள்.வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.முக்கிய முடிவுகளை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.

கும்ப ராசி உறவுகளே:

கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.மகளுக்கு நல்ல வரன் அமையும்.பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

மீன ராசி நேயர்களே:

புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும்.. தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கக்கூடும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும்.வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும்.