google-site-verification=j5PI3Jm-qMqh6IzIUwPVT9hIe8NRcEKqDp_izYflJp4 " " " "

இன்றைய ராசி பலன்! 17.01.2020

இன்றைய பஞ்சாங்கம்: 17-01-2020, தை 03, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி காலை 07.28 வரை பின்பு அஷ்டமி திதி பின்இரவு 05.33 வரை பின்பு தேய்பிறை நவமி. சித்திரை நட்சத்திரம் பின்இரவு 01.12 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. காணும் பொங்கல். கால பைரவர்க்கு உகந்த நாள். கரிநாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

மேஷ ராசி நேயர்களே:

திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். சகோதரர்களால் நன்மை உண்டாகும்.நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. நண்பர் களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். முயற்சிகளில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் சாதகமாக முடியும்.எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். அலுவலகப் பணியின் காரணமாக பயணம் மேற்கொள்ள நேரிடும்.

ரிஷப ராசி அன்பர்களே:

வழக்கு விஷயங்கள் சாதகமாக முடியும். மற்றவர்களுடன் பேசும் போது வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பேச்சில் நிதானம் தேவை.தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது.பணவரவு சுமாராக இருக்கும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.பிற்பகலுக்கு மேல் காரியங்கள் அனுகூலமாகும்.

மிதுன ராசி காரர்களே:

நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. நண்பர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.அண்டை அயலாரின் ஆதரவு இருக்கும். கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். வைத்து புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்

கடக ராசி நேயர்களே:

பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.தாயாருடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். கணவன் – மனைவிக்கி டையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.

சிம்ம ராசி அன்பர்களே:

பிரபலங்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் விலகும். மாலையில் நண்பர்களின் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அலுவல கத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.

கன்னி ராசி காரர்களே:

உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும்.இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.பணவரவு திருப்தி தரும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

துலாராசி உறவுகளே:

கணவன் மனைவிக்குள் சிறு மனஸ்தாபங்கள் வந்து நிங்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளைத் தொடங்குவது சாதகமாக முடியும். உடல்நலனில் கவனம் தேவை. தாயின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். மனதில் இனம் புரியாத பயம் மற்றும் கவலை வந்து போகும்.

விருச்சிக ராசி நேயர்களே:

யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உறவினர்கள் நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.உத்தியோகத்தில் மறைமுகப்பிரச்னைகள் வந்து செல்லும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். இளைய சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

தனுசு ராசி அன்பர்களே:

சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். எடுத்த காரியத்தில் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். உறவினர்கள் வழியாக நற்செய்தி வரும்.தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும்.வியாபாரத்தில் சூழ்ச்சிகளை உணர்வீர்கள்.

மகர ராசி காரர்களே:

சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்பு ஏற்படக்கூடும். மனைவி வழியில் மதிப்பு அதிகரிக்கும்.புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். நல்ல செய்திகள் தேடி வரும்.நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.பூர்வீக சொத்துக்கள் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம்.

கும்ப ராசி உறவுகளே:

பகல் 01.49 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவும் நேரிடும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும்.புது பொருள்கள் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறு சலசலப்பு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். மதியத்திற்கு பிறகு மன நிம்மதி ஏற்படும்.

மீன ராசி நேயர்களே:

01.49 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் தொடர்வதால் . கோபத்தால் இழப்புகள் ஏற்படும்.உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்.புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். . உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும்.பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.