காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்திக்காக நடிகர் வடிவேல் செய்த செயல்..!! குவியும் பாராட்டுக்கள்…!!

நேற்றைய தினம் காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மாரடைப்பால் மரணமடைந்தது அனைவரும் அறிந்தது, இந்த நிலையில் அவர் பற்றிய பல தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது. கிருஷ்ணமூர்த்தி சென்னை வந்து தவித்துக் கொண்டிருந்த போது வடிவேல் கிருஷ்ணமூர்த்திக்கு நண்பராகி உள்ளார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

தனது சினிமா ஆசை பற்றி வடிவேலுவிடம் அவர் கூறிய போது நிச்சயம் நீ பெரிய ஆளாக வருவாய் என வடிவேல் கூறியது மட்டும் இன்றி தான் நடித்த பல படங்களில் கிருஷ்ணமூர்த்தியை நடிக்க வைத்தார். கடந்த வருடம் காலில் அடி பட்டு சத்திர சிகிச்சை செய்யவேண்டிய நிலைக்கு ஆளானார்.

ஆனால் அவருக்கு உதவ யாரும் முன் வராத நிலையில் உடனடியாக வடிவேல் பணம்கொடுத்து உதவியுள்ளார். அது மட்டும் இன்றி அவரது இறுதி கிரியைகள் நடைபெறும் இடத்திற்கு சென்ற வடிவேல் தேவையான அத்தனை உதவிகளையும் செய்துள்ளார்.

வடிவேல் பற்றி கிருஷ்ண மூர்த்தியின் மனைவி குறிப்பிடுகையில் கணவர் உயிரோடு இருக்கும் வரை அவருக்கு ஒரு சகோதரன் போல் இருந்தது வடிவேல் சார் மட்டும் தான். தேவையான அத்தனை உதவிகளையும் எங்களுக்கு செய்தார். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி இன்று வரை எமக்கு உதவுகிறார். அவருக்கு எப்போதும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளார்…!