வீட்டில் பல நாள் கண்ணீருக்கு ஒரே நாளில் முற்றுப்புள்ளி வைத்த பிக் பாஸ் டீம்..! ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் களை கட்டிய வீடு..!!

கடந்த சில நாட்களாக கண்ணீரும் கவலையுமாக இருந்த பிக் பாஸ் வீடு மறுபடி சகஜ நிலைக்கு திரும்ப ஆரம்பித்திருகிறது. நேற்றைய தினம் அத்தனை போட்டியாளர்களும் கவலையும் கண்ணீருமாக இருந்தனர் அதற்கான காரணம் லொஸ்லியாவின் தந்தையின் கோபம்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

மகள் தவறு செய்வதை எந்த தந்தையாலும் ஏற்றுக் கொள்ள முடியாது இவராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அதனால் சில பிரச்சனைகள் நடந்தது, நேற்றைய நிகழ்ச்சியில் லொஸ்லியா குடும்பம் மட்டுமே ஸ்கோர் செய்தது. அதனை தொடர்ந்து இன்றைய முதல் ப்ரோமோவில் தர்சனின் குடும்பமும் இரண்டாவது ப்ரோமோவில் வனிதாவின் குழந்தைகளும் வந்துள்ளனர்.

வீட்டில் எவ்வளவு பெரிய துன்பம் இருந்தாலும் அதனை நொடியி தீர்க்கும் சக்தி குழந்தைகளிடம் மட்டுமே இருக்கிறது என்பதற்கு இன்று வீட்டிற்குள் நுழைந்த வனிதாவின் குழந்தைகளும் ஒரு எடுத்துக் காட்டு. சோகமாக முகத்தை வைத்துக் கொண்டும் அழுதுகொண்டும் இருந்தவர்கள் அனைவருமே இன்று குழந்தைகளுடன் ஓடி விளையாடியது மகிழ்ச்சியாக பார்க்க முடிந்தது.

வாயாடி பெத்த புள்ள பாடல் ஒலிப்பரப்பானதுமே வனிதாவின் குழந்தைகள் என்பது தெரிந்தது. பிக் பாஸ் டீமும் குழந்தைகளுக்காக நேரத்தை கொடுத்ததால் போட்டியாளர்கள் அனைவரும் குழந்தைகளாக மாறினார்கள். கடந்த நாட்களின் வலிகளை ஒரே நாளில் மறக்க வைத்த குழந்தைகள் தேவதைகள் தான்..!!