இன்றைய ராசி பலன் – 12.07.2021
இன்றைய பஞ்சாங்கம்,12-07-2021, ஆனி 28, திங்கட்கிழமை, துதியை திதி காலை 08.20 வரை பின்பு வளர்பிறை திரிதியை. ஆயில்யம் நட்சத்திரம் பின்இரவு 03.14 வரை பின்பு மகம். சித்தயோகம் பின்இரவு 03.14 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. நவகிரக வழிபாடு நல்லது. இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷ ராசி நேயர்களே:தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு. நண்பர்களின் சந்திப்பால் பொருளாதார ரீதியான பிரச்சினைகள் குறையும்.முக்கிய முடிவுகள் எடுப்பதில் பொறுமை அவசியம். மகளுக்கு நல்லவரன் அமையும்.தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.
ரிஷப ராசி அன்பர்களே:அரசால் ஆதாயம் உண்டு.குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார்.குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும்.
மிதுன ராசி காரர்களே:விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும் என்றாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும்.திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.பூர்வீக சொத்துக்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும்.கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும்.
கடக ராசி நேயர்களே:விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். தந்தையுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் அவருடன் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை. நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லகூடிய சில கருத்துக்கள்கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.
சிம்ம ராசி அன்பர்களே:தாயாருடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும்.குடும்பத்தில் பெரியவர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். அவர் மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.நீண்ட நாள் எதிர்பார்த்த வங்கி கடன் கிட்டும்.உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப் படுவீர்கள்.
கன்னி ராசி காரர்களே:குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் சீராகும்.தந்தைவழி உறவினர்களால் குடும்பத்தில் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாகக் கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும்.
துலாராசி உறவுகளே:பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும்.உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். உறவினர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம்.எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிக ராசி நேயர்களே:காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வீண் செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். கணவன்- மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். மூன்றாவது நபரின் தலையீடு காரணமாக குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பம் நீங்கும்.
தனுசு ராசி அன்பர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.
மகர ராசி காரர்களே:கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும்.பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும்.வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள்.
கும்ப ராசி உறவுகளே: வண்டி வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.குடும்பம் உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள்.
மீன ராசி நேயர்களே
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது.வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். தந்தையாரின் உடல் ஆரோக்கியம் மேம் படும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்கள் விஷயங்களில் முடிந்த வரை தலையிடாமல் இருப்பது நல்லது.