சத்துள்ள நெல்லிக்காய் துவையல் எப்படி செய்வது???
நெல்லிக்காயில் விட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது. இது உடலுக்கு ஆரோக்கியம், கூந்தல் பிரச்சனை, சருமப்பிரச்சனை அனைத்தையும் போக்கும். நெல்லிக்காய் புளிப்பு, இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளைக் கொண்டது. இதை எப்படி துவையல் செய்து சாப்பிடலாம் என பார்ப்போம்.
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் – 6, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, உப்பு – தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை , பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – சிறிதளவு
செய்முறை: பெரிய நெல்லிக்காயை கொட்டை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் தாளித்து துவையலில் சேர்த்துப் எடுக்கவும்.