இந்தியாவில் எதிர்வரும் 16 ஆம் திகதி மோட்டோரோலா ஸ்மார்ட் டிவி அறிமுகம்…!!!!

மோட்டோரோலா நிறுவனம் புதிதாக தயாரித்த ஸ்மார்ட் டிவியை வெளியிடயுள்ளது. இந்த நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் டிவியின் மாடல் முதல் முதலில் இந்தியாவில் எதிர்வரும் 16 ஆம் திகதி அறிமுகம் செய்யவுள்ளது.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

சியோமி, சாம்சங், எல்ஜி உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இந்திய சந்தையில் அதிநவீன ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றமை. இந்த நிலையில் மொபைல் போன்களை மட்டுமே அதிகளவில் விற்பனை செய்து வந்த மோட்டோரோலா நிறுவனம் தற்போது ஸ்மார்ட் டிவியை இந்திய சந்தையில் களமிறக்கவுள்ளது.

அதன்படி எதிர்வரும் 16 ஆம் திகதி புதுடெல்லியில் இடம்பெறும் ஒரு நிகழ்வின் போது மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய முதல் ஸ்மார்ட் டிவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஸ்மார்ட் டிவி. ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட் டிவியை மோட்டோரோலா நிறுவனம் பிளிப்கார்ட் உடன் இணைந்திருக்கிறது. இது வரைக்கும் வெளிவந்த தகவல்களுக்கு அமைய மோட்டோரோலாவின் ஸ்மார்ட் டிவிகளை பிளிப்கார்ட் தயாரித்து விற்பனை செய்யும் என கூறப்படுகிறது.

மோட்டோரோலா நிறுவனம் எதிர்வரும் 16 ஆம் திகதி புதிய ஸ்மார்ட் டிவியுடன்  சேர்த்து தனது மோட்டோ இ6எஸ் ஸ்மார்ட் போனையும் இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.

மோட்டோரோலாவின் புதிய ஸ்மார்ட் டிவி.யில் 30 வாட் முன்புற ஸ்பீக்கர்கள், டிடி.எஸ். ட்ரூ சரவுண்ட் சவுண்ட் மற்றும் டால்பி ஆடியோ வசதி வழங்கப்படும். அதோடு டிஸ்ப்ளே பேனலில் MEMC தொழில்நுட்பம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய டிவிகளின் விலை சியோமி, தாம்சன், வு, கோடாக் போன்ற நிறுவனங்களின் டிவியின் மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் விலை நிர்ணயம் செய்யப்படும்.