" "" "

தனது சொந்த மகள்கள் இருவருக்கு தினமும் பாலியல் தொல்லை கொடுத்து வந்த தந்தைக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு.!

தான் பெற்ற மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் கன்னி ராஜபுரத்தை சேர்ந்த மாரிமுத்து. இவர் சொந்த வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த வருடம் பெப்ரவரி மாதம் கீழக்கரை மகளீர் பொலீஸ் நிலையத்தில் 12 மற்றும் 10 வயது சிறுமிகள் சிறுவர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப் பட்டார்.

ஆரம்பத்தில் அப்பாவிடம் அன்புக்காக ஓடிவந்த குழந்தைகளுக்கு அப்பாவின் அணைப்பில் தவறு கண்டுபிடிக்க தெரியவில்லை. இதனால் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். ஆனால் சில நாட்கள் செல்லும் போது மாரிமுத்துவின் செயற்பாடுகளில் சந்தேகம் ஏற்பட கவனித்த போது குழந்தைகளிடம் அத்துமீறுவது தெரியவந்துள்ளது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமிகளிடம் அத்துமீறி நடந்துகொண்டதை பாட்டி மற்றும் உறவினர்களிடம் கூறியதை தொடர்ந்து பொலீஸில் புகார் கொடுத்தனர். இதனை தொடர்ந்து கீழக்கரை பொலீஸாரால் கைது செய்யப் பட்ட மாரிமுத்து சிறையில் அடைக்கப் பட்ட நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது.

இதன் போது பெற்ற பிள்ளைகளை மோசமான முறையில் பாலியல் தொல்லை கொடுத்த தந்தையான மாரிமுத்துவிற்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது. அனைத்து பாலியல் குற்றவாளிகளுக்கும் இது போன்ற தீர்ப்பளிக்க வேண்டும் என்று மக்கள் கூறி வருகின்றனர்.!!