" "" "

3 குழந்தைகளை துடிக்க துடிக்க கொலை செய்துவிட்டு இளம் தாய் எடுத்த முடிவு.! அதிர வைக்கும் காரணம்.!

கணவரின் செயலால் தனது மூன்று குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட இளம் தாய் தொடர்பான செய்திகள் வெளியாகி அதிர வைத்துள்ளது.சென்னை, ஆவடியை அடுத்த திருநின்றவூர் நடுக்குத்தகை திலீபன் நகரில் வசித்து வந்தவர் ரமேஷ். இவருக்கும் கெளரி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்து மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.

திருமணமாகி ஆரம்பத்தில் நல்லவராக இருந்த ரமேஷ் சில வருடங்கள் மட்டுமே மனைவி குழந்தைகளை கவனித்தார். பின் குடி குடி என அனைத்தையும் அழித்தார்.குழந்தைகளுடன் செய்வதறியாது தவித்த கெளரி ரமேஷிடம் பலமுறை எடுத்து கூறிய போதும் கேட்கும் மன நிலையில் ரமேஷ் இருக்கவில்லை. இதனால் மனமுடைந்து போய் இருந்தார் கெளரி.

வழமை போல் நேற்றும் குடி போதையில் வந்த ரமேஷ் மிக மோசமாக திட்டி சண்டையிட்டுள்ளார். பின் வெளியே சென்றுள்ளார். மனமுடைந்து போய் இருந்த கெளரி தனது சேலைகளில் தூக்கு போட்டு மூன்று குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

வெளியே சென்று வந்த ரமேஷ் கதவை நீண்ட நேரம் தட்டுவதை அவதானித்த அயலவர்கள் வந்து கதவை உடைத்த போது 4 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப் பட்டனர். பொலீஸார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.!