" "" "

சந்தானத்தின் உறவுக்கார பெண்ணின் மரணத்தில் திடீர் திருப்பம். பரபரப்பாகும் மர்ம மரண விசாரணை.

நடிகர் சந்தானத்தின் உறவுக்காக பெண்ணின் மரணத்தில் மர்மம் நீடித்து வந்த நிலையில் அவரது கணவரே கூலிப் படையை ஏவி குறித்த பெண்ணை கொலை செய்ததாக கூறி அவரது உறவினர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். திருவாரூர் கிடாரங் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபாரதி. இவர் அமெரிக்காவில் பணி புரிந்து வந்த நிலையில் பிரகாஷ் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

பின்னர் இருவரும் திருவாரூர் வந்து கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.இருவரும் ஜோடியாகவே அமெரிக்கா சென்று வாழ்ந்து வந்த நிலையில் பெண் குழந்தை ஒன்றும் பிறந்த பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

ஜெயபாரதி தாய்வீட்டுக்கு வந்ததுடன் அஞ்சல் அலுவலத்தில் பணிபுரிந்தார். சம்பள நாள் அன்று ஏ டி எம் சென்று பணத்தை எடுத்துக் கொண்டு வீடு திரும்ப முயன்றவர் மீது வேகமாக வந்த வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். இதனை விபத்து என ஆரம்பத்தில் கூறிய போதும் திட்டமிட்ட கொலை என்பது சிசிடிவி காட்சிகளில் உறுதிப்படுத்தப் பட்டது.

இருப்பினும் இந்த விபத்து தொடர்பான புகார்களை ஜெயபாரதியின் பெற்றோர் பொலீஸில் புகார் கொடுத்த போதும் பொலீஸார் கண்டுகொள்ளாத நிலையில் நடிகர் சந்தானத்திடம் உறவினர்கள் சென்றுள்ளனர். விபத்தில் மரணமடைந்த ஜெயபாரதி உறவு முறையில் சந்தானத்தின் சகோதரி என்பதால் சந்தானமும் சகோதரியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என பொலீஸில் புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தனிப்படை அமைக்கப் பட்டு விசாரணை இடம்பெற்று வருகிறது.!