நாளை ஜெர்மனிக்கு விஜயம் செய்யவுள்ள சிங்கப்பூர் ஜனாதிபதி..!!!
நாளைய தினம் ஜெர்மனிக்கு சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாகோப் 05 நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ முதல் விஜயத்தை சிங்கப்பூர் ஜனாதிபதி மேற்கொள்ளவுள்ளார். பெர்லினில் அதிபர் ஃபிரெங்க்-வால்டர் ஸ்டெய்ன்மாயர் (Frank-Walter Steinmeier), ஜனாதிபதி ஹலிமாவுக்குச் சிறப்பு விருந்தளித்துக் கௌரவிப்பார்.
ஜெர்மானியப் பிரதமர் எஞ்சலா மர்க்கலையும் (Angela Merkel) அவர் சந்திக்கவுள்ளார். பர்லின், ஃபிரங்க்ஃபர்ட், ஹய்டல்பர்க் (Berlin, Frankfurt, Heildelberg) முதலிய நகரங்களில் அமைந்துள்ள ஜெர்மானிய நிறுவனங்களுக்கும் ஜனாதிபதி ஹலிமா வருகையளிப்பார். ஃபிரங்க்ஃபர்ட் நகரில் வாழ்ந்து வரும் சிங்கப்பூரர்களையும் அவர் சந்திப்பார். ஜனாதிபதியுடன் அவரது கணவரும், கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கும் உடன் செல்கின்றனர்.