" "" "

அமாவாசை தினமான இன்று சூர்யகிரகணம் எத்தனை மணிக்கு தெரியுமா? இத பாருங்கள்..!!

இன்று பொதுவான அமாவாசை தினம் மட்டும் இன்றி சூர்ய கிரகணமும் இருக்கிறது. இன்று சிலி நாட்டில் செரீனா பகுதியில் மதியம் 3.22 மணியில் இருந்து மாலை 5.46 மணி வரை இந்த சூர்ய கிரகணம் இருக்கும்.அதாவது இந்திய மற்றும் இலங்கை நேரப்படி இரவு 22.24 மணியில் இருந்து அதிகாலை 2.14 வரை சூர்ய கிரகணம் இருக்கும். எமது நாட்டில் இந்த சூர்ய கிரகணத்தை பார்க்க முடியாது. ஆனால் சில நாடுகளில் நேரடியாக பார்க்க முடியும்.ஆர்ஜென்டீனா மற்றும் தென் பசிபிக்கை அண்டிய பகுதிகளில் நேரடியாக காணலாம். இதனால் அறிவியல் ரீதியாக எந்த மாற்றங்களும் ஆசியாவில் நிகழாத போதும் ஆன்மீக ரீதியாக ஆபத்து பொதுவானது என்று கூறப் படுகின்றது. 2019ம் ஆண்டில் வரும் முதல் சூர்ய கிரகணம் அதுவும் அமாவாசை நாளில் வருவதால் அவதானமாக இருக்க வேண்டிய நாள் இன்றாகும். எமது நேரம் இரவு 22.24 மணிக்கு மேல் உணவு எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது சிறப்பு.

குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்கலாம். அமாவாசை தினமான இன்று வீட்டில் உள்ள ஆண்கள் சாமி விளக்கேற்றி இறைவனுக்கு பூஜை செய்தால் சிறப்பானது. இன்று அமாவாசையுடன் சூர்ய கிரகணமும் இருப்பதால் அதிக சக்தி வாய்ந்த நாள் அதனால் இறைவழிப்பாட்டில் அதிக ஈடுபாடு கொள்ளுங்கள். இன்று இரவு 10 மணிக்கு மேல் உணவு உண்பதை தவிர்ப்பதும் நல்லது தான். எமது நாட்டில் சூரிய கிரகணம் இல்லாவிட்டாலும் அதன் தாக்கம் எமக்கு இருக்கும் என்று கூறப்படுகின்றது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)