இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று ..!!!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி ராஜ்கோட் நகரில் இன்று நடைபெறுகிறது.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

இந்தியாவில் குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் இன்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக விளையாடுவதற்காக வங்கதேச அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த முதலாவது போட்டி கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணியை சொந்த மண்ணிலேயே தோற்கடித்து அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை கடந்த ஆட்டத்தில் பந்து வீச்சு எடுபடவில்லை. இதனால் இன்றைய ஆட்டத்தில் அணியில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கின்றது.

வங்கதேச அணியில் கேப்டன் முகம்மதுல்லா, முஷ்பிகுர் ரஹீம் ஆகியோர் நல்ல பார்மில் இருப்பதால் இந்திய அணிக்கு நிச்சயம் வங்கதேசம் நெருக்கடி கொடுக்கும் என நினைக்கலாம். இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றால் வங்கதேச அணி தொடரை கைப்பற்றி விடும் என்ற காரணத்தால், வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது. மகா புயல் காரணமாக, ராஜ்கோட்டில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .