கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தம்பதியினர் கைது..!!!

கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய தம்பதியினர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் அவுஸ்திரேலியாவில் இருந்து நேற்றிரவு 11 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்த தம்பதியினரை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

46 தோட்டாக்களை அனுமதி இன்றி வைத்திருந்த சம்பவம் தொடர்பாக கம்பஹா நீதவான் நீதிமன்றம் இவர்களுக்கு எதிரான பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. மேலும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட தம்பதியினர் கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி நெதகம – கொட்டுகொட பிரதேசத்தில் பஸ் சமி என்ற பாலசூரிய லேக்கம்லாகே பிரசாத் நிரோஷன் பாலசூரிய என்ற நபரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்தவர் எனவும் பொலிஸ் தெரிவித்தார்.